இந்த பிரச்சனை இருந்தா? மறந்து கூட கத்திரிக்காய் சாப்பிடக் கூடாது!

Published:

நம் இந்திய சமையலில் கத்திரிக்காய்க்கு எப்போதுமே தனி இடம் தான். கத்திரிக்காயில் மட்டும் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய், தேனி சின்னமனூர் சிம்ரன் கத்தரிக்காய் எனத் தமிழ் நாட்டில் மட்டும் 9 வகைகள் உள்ளது.

இவை பார்ப்பதற்கும் பச்சை , வெள்ளை ,ஊதா என பல வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் உள்ளது.

இந்த கத்திரிக்காய் வைத்து பொரியல், பிரியாணியுடன் சாப்பிடும் ரைத்த என பல வகைகளில் செய்து சாப்பிட முடியும்.கத்திரிக்காய் தொக்கு மட்டும் அனைத்து டிஷ்களிலும் கச்சிதமாக பொருந்தி சுவையிலும் அசத்தளுடன் அமையும். கத்திரிக்காயை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.

சுவை மட்டுமில்லாமல் விட்டமின் மினரல்ஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது கத்திரிக்காய். சில உடல் பாதைகளை தீவிரப்படுத்தும் தன்மை கத்திரிக்காய்க்கு உண்டு என்பதால் யாரெல்லாம் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்களுக்கு கத்திரிக்காய் உண்டாக்கும் வாயு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

சரும எரிச்சல் அரிப்பு போன்ற எந்த வகை சரும ஒவ்வாமை இருப்பவர்களும் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.

மன அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் இக்காயை சாப்பிடக்கூடாது. மாத்திரைகளின் ஆற்றலை குறைப்பதோடு மன அழுத்தத்தை கத்திரிக்காய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ரத்தசோகை உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.

கண் எரிச்சல் கண் வீக்கம் பார்வை குறைபாடு மற்றும் மூல நோய் இருப்பவர்களும் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது.

சிறுநீரகத்தை இயற்கையாகவே சுத்தப்படுத்தும் சூப்பர் உணவுகள் எதுன்னு தெரியுமா? இந்த பதிவை பாருங்க..

சிறுநீரக பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என கூறுகிறார்கள் உணவு நிபுணர்கள். நம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுகளை சரிபார்த்து சாப்பிடுவதால் பல உடல் பாதைகளை தவிர்க்கலாம் .

மேலும் உங்களுக்காக...