மே மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? முழு விபரங்கள்..!

Published:

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து வரும் நிலையில் வரும் மே மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, நான்காவது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறையாக உள்ளது என்பதை தெரிந்தது. அது மட்டும் இன்றி அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் ஒரு சில மாநிலங்களில் உள்ள சிறப்பு பண்டிகைக்கும் அந்தந்த மாநிலங்களுக்கு மட்டும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின் படி மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் என்பதை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தின விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் தினத்தை தவிர மே மாதத்தில் சனி ஞாயிறு மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை என்றும் ஒரு சில நாட்கள் மட்டும் பிரத்யேகமாக சில மாநிலங்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே மாதம் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:

மே 1 (திங்கட்கிழமை): மே தினம், மகாராஷ்டிரா தினம்

மே 7: ஞாயிறு

மே 9 (செவ்வாய்): ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்

மே 13: இரண்டாவது சனிக்கிழமை

மே 14: ஞாயிறு

மே 16 (செவ்வாய்): மாநில நாள் – சிக்கிம்

மே 21: ஞாயிறு

மே 22 (திங்கட்கிழமை): மகாராணா பிரதாப் ஜெயந்தி – குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்

மே 24 (புதன்கிழமை): காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி – திரிபுரா

மே 27: நான்காவது சனிக்கிழமை

மே 28: ஞாயிறு

மேலும் உங்களுக்காக...