மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த 100 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது.. 4 போலி சிம்கார்டுகள் பறிமுதல்..!

Published:

மேட்ரிமோனியல்   இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்திருந்த சுமார் 100 பெண்களை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் சம்பாதித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் தனக்கு திருமணமாகவில்லை என்றும் தாய் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும் என்னிடம் அதிகமாக பணம் இருந்தாலும் தனக்கு துணையாக யாரும் இல்லை என்றும் மேட்ரிமோனியில் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து இவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த பல பெண்களுடன் சாட்டிங் செய்வார் என்பதும் அவர்களிடம் பேசும் போது தன்னிடம் விலை உயர்ந்த கார் இருப்பதாகவும் தான் பிசினஸ் செய்வதாகவும் தனக்கு மிகப்பெரிய வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் அவ்வப்போது ஒரு சில காரணங்களுக்காக பணம் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை இருமடங்காக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்களிடம் கேட்டுள்ளார். அதை நம்பி பெண்களும் பணம் கொடுத்த நிலையில் அந்த பணத்தை எவ்வாறு கைப்பற்றியவுடன் மாயம் ஆகி உள்ளார்.

அதேபோல் நாடு முழுவதும் சுமார் 100 பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை ,ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் அவரிடம் நட்பு வைத்திருந்து பணத்தை இழந்ததாகவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 15 லட்சம் கடன் கேட்டபோது தான் அந்த பெண் சுதாரித்து காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து அவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்த போது தன்னிடம் விலை உயர்ந்த கார் இருப்பதாக கூறியது பொய் என்றும் அது அவரது உறவினர் அது கார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து நான்கு சிம்கார்டுகள், 9 ஏடிஎம் கார்டுகள் மற்றும் விலையுந்த கடிகாரங்கள் தொலைபேசி உள்பட பொருட்களை கைப்பற்றி உள்ளனர்

உண்மையில் அந்த நபர் திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு மூன்று வயது மகள் இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பலரிடம் ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளதாகவும் அதனை அடுத்து அவரது வங்கி கணக்கை முடக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...