கொத்து கொத்தா முடி கொட்டுதா…. கத்தையா முடி வளர இந்த எண்ணெய் போதும்!

Published:

வாழ்வில் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இன்றைய உலகில் பெரும்பாலானூருக்கு தலைமுடியை முறையாக பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக பலருக்கும் இளநரை மற்றும் தலைமுடி உதிர்வு போன்றவை சராசரி பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது .

இதற்காக கடைகளில் பல பிரத்தியேக எண்ணெய்கள் கிடைத்துவரும் நிலையில் இயற்கையாக தலைமுடி ஆரோக்கியத்திற்கான எண்ணையை வீடுகளில் தயாரித்து பயன்படுத்துவது சிறப்பான பலன்களைத் தரும்.

கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கும் கரிசலாங்கண்ணி கருமையான வலுவான மற்றும் அடர்த்தியான தலைமுடி வளர்ச்சிக்கு அதிகம் பங்களிக்கிறது.

3 கப் அளவு கழுவி காய வைக்கப்பட்ட கரிசலாங்கண்ணி இலைகளை 10 ஏலக்காய்களுடன் சேர்த்து அரைத்து சூடாக்கப்பட்ட 400 மில்லி நல்லெண்ணையில் காய்ச்சி கொள்ளவும். ஆறியப்பின் வடிகட்டி தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம்.

இந்த எண்ணையை வாரம் இரண்டு முறை உபயோகித்து வரும் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியும் என இயற்கையை மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் உங்களுக்காக...