மக்களே… வெயில் குறித்து எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

Published:

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பச் சலனம் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் துவங்கியது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…!

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும், ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...