கேரள ஸ்டைல் ஸ்பெஷல் பச்சரிசி நெய்யப்பம் வீட்டிலேயே பண்ண முடியுமா!

By Velmurugan

Published:

நெய் அப்பம் என்பது ஒரு பாரம்பரிய மற்றும் பண்டிகை இனிப்பு ரெசிபி ஆகும். இது கேரளாவில் பிரபலமான ஒரு உணவாகும், இது பொதுவாக தென்னிந்தியா முழுவதும் கார்த்திகை தீபத்திற்காக தயாரிக்கப்படுகிறது. நெய் அப்பம் செய்வது எப்படி என்பது இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:-

பச்சை அரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
அரிசி மாவு- 1 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
சுக்கு பொடி – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்

neyyappam

செய்முறை:-

முதலில் பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீரில் கலந்து பாகு தயார் செய்து அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

3 மணி நேரம் ஊறவைத்த அரிசியை மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் வெல்லம் பாகு-வை அந்த அரிசி மாவில் சேர்க்கவும்.

குழந்தைகளுக்கு மிகவும் சத்தான கேரட் வைத்து மஞ்சூரியன் ரெஸிபி!

அதனுடன் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், சுக்கு போடி சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் பணியாரம் கடாயை சூடாக்கி, ஒவ்வொரு துளையிலும் ஒரு தேக்கரண்டி நெய் / எண்ணெய் சேர்க்கவும்.

ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

பின்னர் அதை கவனமாக மறுபுறம் திருப்பி – தேவைப்பட்டால் எண்ணெய் / நெய் சேர்க்கவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.

நாவிற்கு ருசியான உடுப்பி ஸ்டைல் சாம்பார்! இதோ உங்களுக்காக!

சூடான சுவையான நெய் அப்பத்தை பரிமாறவும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment