கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் ஓடிடி வெளியீடு எப்போ தெரியுமா? மாஸ் அப்டேட்!

Published:

தீபாவளி தினத்தன்று புது வரவாக கார்த்தியின் சர்தார் தமிழில் வெளியானது .மித்ரன் இயக்கிய இந்தப் படம் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படமான சர்தார் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சர்தார் பாக்ஸ் ஆபிஸில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்தது, வசூல் தமிழ்நாட்டில் தொடக்கத்தில் இருந்து 40 சதவீதம் பெரிய வளர்ச்சியைக் கண்டது, படத்தில் பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இந்த படத்தை வெளியிடுகிறார்.ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.

அல்லு அர்ஜுனின் நடிப்பில் புஷ்பா: தி ரூல் படத்தின் மாஸ் அப்டேட் !

இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சர்தார் கதைக்களமாக படத்தில் 16 வேடங்களில் கார்த்தி நடித்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் சமீபத்திய சாதனையால் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதன் படப்பிடிப்பு 2023 இல் தொடங்கும் என தகவலும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ‘சர்தார்’ திரைப்படம் இந்த மாதம் 18-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment