குழந்தைகளுக்கு மிகவும் சத்தான கேரட் வைத்து மஞ்சூரியன் ரெஸிபி!

கேரட்டில் பொதுவாக நிறைய சத்துக்கள் உள்ளன என அறிந்திருப்போம். மேலும் கேரட் சாப்பிட்டால், கண்களுக்கு தேவையான சத்து அதில் உள்ளதால், கண் பார்வை கூர்மையாகும். எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பெரும்பாலும் கேரட்டை நாம் ஜூஸ் மட்டுமே போட்டு குடிப்போம். அதற்க்கு மாற்றாக சற்று வித்தியாசமாக மஞ்சூரியன் செய்தும் சாப்பிட முடியும். அந்த கேரட் மஞ்சூரியனை எப்படி செய்யலாம் என பாக்கலாம் வாங்க!

carrot

தேவையான பொருள்கள்:-

கேரட் – 1/4 கிலோ (வட்டமாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 1
சில்லி சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் – 1/2 (பொடி பொடியாக நறுக்கியது)
தக்காளி சாறு – 5 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மைதா – 1/4 கப்

carrot manchurian receipe

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா,சோள மாவு,மிளகாய் தூள்,மிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு அனைத்து பொருட்களையும் போட்டு அதி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கேரட் துண்டுகளை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து அதை மற்றொரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்த பிறகு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறு, சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்த்து அதை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து முதலில் கரைத்து வைத்துள்ள மாவை அதனை கடாயில் ஊற்றி அதை நன்கு கொதி விட்டு, பின் வறுத்து வைத்துள்ள கேரட்டை அதில் போட்டு, வேண்டும் என்றால் உப்பு சேர்த்து, நீரானது சுண்டும் வரை கிளறி இறக்கி வைக்க வேண்டும், மிகவும் சுவையான கேரட் மஞ்சூரியன் ரெடியாகிவிடும். இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி, சிறிது நேரம் மூடி வைத்து பரிமாறினால், அதன் சுவை தாறுமாறாக இருக்கும்.

அடர்த்தியான முடி வளர வேண்டுமா.. மருதாணியின் பங்கு மற்றும் பயன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.