ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

Published:

ஹோட்டல் ஸ்டைல் கடாய் மஷ்ரூம் இனி எளிமையாக வீட்டுலே செய்யலாம்..

தேவையான பொருள்கள்

மஷ்ரூம் – 100 கிராம்,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்புன் ,
மிளகாய் தூள் – 3/4 டீஸ்புன்,
மல்லித்தூள் – ஒரு டீஸ்புன்,
கரம் மசாலா தூள் – அரை டீஸ்புன்,
பச்சை மிளகாய் – 3,
குடை மிளகாய் – பாதி,
கொத்தமல்லி – கைப்பிடி அளவு ,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

அரை கப் ரவா இருக்கா? ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரவா கட்லெட் ரெடி!

செய்முறை

ஒரு வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின்பு காளானை கழுவி நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின்பு காளானை போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

காளான் சிறிது வதங்கியதும் மேலே உள்ள தூள் வகைகளை எல்லாம் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்பு தேவையான அளவு நீர் விட்டு மேலே கொத்தமல்லி தூவி காளான் வேகும் வரை கொதிக்க விடவும்.

இன்னொரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி அடுக்கடுக்காக பிரித்தெடுத்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கவும் . வதக்கிய வெங்காயத்தை காளான் கிரேவியில் கொட்டி கிளறி இறக்கவும்இப்போது சுவையான கடாய் மஷ்ரூம் தயார்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment