மீனம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

Published:

செவ்வாய் 3 ஆம் இடத்தில், சனி பகவான் 11 ஆம் இடத்தில், ராகு 4 ஆம் இடத்தில், கேது 8 ஆம் இடத்தில், குருவின் பார்வையில் சூர்யன், சுக்கிரன், புதன் என கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்புரீதியான மாற்றங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைவிட, இருக்கும் இடத்தில் பிரச்சினை இருக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது. தொழில்ரீதியாக செவ்வாயின் பார்வை நிரந்தரமான வருமானத்தைக் கொடுக்கும்.

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும். குருவின் பார்வையால் புதன் இருப்பதால் மாணவர்கள் கல்வி நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கள். மேலும் புத்திக்கூர்மையுடன் செயல்படுவார்கள்.

லோன்கள் போட்டு வண்டி, வாகனம் என உங்களுக்குத் தேவையானதை வாங்குவீர்கள். ராகுவின் இருப்பு தடங்கல்களை ஏற்படுத்தும்; எதையும் சொல்லாமல் செய்து முடிப்பதே நல்லது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை மூன்றாவது நபரின் ஆலோசனையைக் கேட்காமல் செயல்படுதல் நல்லது. உறவினர்களால் கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் ரீதியாக ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

நவம்பர் இரண்டாம் பாகம் தைரியம் கொடுக்கும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment