அரை கப் ரவா இருக்கா? ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரவா கட்லெட் ரெடி!

மாலையில் பொழுது சூடாக சுவையாக சாப்பிட வேண்டுமா? அப்படினா சற்று வித்தியாசமாக ரவையை வைத்து கட்லெட் செய்து சாப்பிடுங்கள். இது காபி, டீ குடிக்கும் போது சாப்பிடுவதற்கு ஏற்றதாக்க இருக்கும் .

தேவையான பொருட்கள்:

ரவை – 1/2 கப்

ஸ்வீட் கார்ன் – 1/4 கப்

குடைமிளகாய் – 1/4 கப்

பச்சை மிளகாய் – 1

வெங்காயம் – 1/4 கப்

கொத்தமல்லி – கைப்பிடி அளவு

பிரட் தூள் – சிறிதளவு

மைதா – சிறிதளவு

உப்பு – தேவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

தண்ணீர் – சிறிதளவு

செய்முறை:

முதலில் வாணலியில் சூடேற்றி, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி சூடானதும், ரவை, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சிறிது உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேக விட வேண்டும், 2-3 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

பின் மைதாவை தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, ரவா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, நமக்கு பிடித்த வடிவில் தட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் தட்டி வைத்த ரவையை, மைதாவில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

கேரளா ஸ்டைல் தேங்காய் தால் ரெசிபி நம்ம வீட்டிலே செய்யலாமா!

இறுதியில் ஒரு வாணலியை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா கட்லெட் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews