தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. ஜொமைட்டோ ஊழியரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வாடிக்கையாளர்கள்.. இதுதான் மனிதநேயம்..!

ஜொமாட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர், ஆர்டர் கொடுக்க சென்ற இடத்தில் எதிர்பாராத அனுபவம் ஒன்றை பெற்றார். வழக்கம் போல் ஆர்டரை கொடுத்துவிட்டு செல்வதற்கு பதிலாக, அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான்,…

zomato

ஜொமாட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர், ஆர்டர் கொடுக்க சென்ற இடத்தில் எதிர்பாராத அனுபவம் ஒன்றை பெற்றார். வழக்கம் போல் ஆர்டரை கொடுத்துவிட்டு செல்வதற்கு பதிலாக, அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான், அவரது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இன்ஸ்டாகிராம் வீடியோவில், டெலிவரி ஊழியரை அங்கிருந்தவர்களில் ஒருவர் அவரது கண்களை மூடி, உள்ளே அழைத்து செல்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல், அந்த ஊழியர் “எனக்கு ஏதேனும் சிறப்பு இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

பின்னர், அந்தக் குழுவினர் அவரை ஒரு அறைக்குள் அழைத்து செல்கிறார்கள். உள்ளே சென்றதும், அவரது கண்களைத் திறக்க, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என்ற குரலுடன், அவருக்காகவே புன்னகைத்து கைதட்டும் பலரை அவர் அங்கே பார்க்கிறார். அது அவரது 40வது பிறந்தநாள். இந்த செயல் அவரை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி, ஆனந்தக் கண்ணீர் வரவழைக்கிறது. அந்த குழுவினர் அவருக்குக் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்த இந்த தருணம் உண்மையில் மனதை உருக்கும் விதமாக இருந்தது.

வீடியோவில், “நீங்கள் ஒரு ஜொமாட்டோ ஊழியருக்கு மகிழ்ச்சியான தருணத்தை வழங்கினீர்கள்” என்றும், “எங்கள் ஜொமாட்டோ டெலிவரி ஊழியருக்கு நிறைய அன்பு வழங்கப்பட்டுள்ளது” என்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வீடியோ நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தக் குழுவினரின் இந்த அன்பான செயலை பாராட்டிப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “அவர் இவ்வளவு பெரியதை எதிர்பார்த்தாரா என்று தெரியவில்லை, ஆனால் பலர் அவருக்காக பாடுவதை பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார் என்பது உண்மை,” என்று ஒருவர் எழுதினார். மற்றொருவர், “இதுதான் நாம் விரும்பும் உலகம், இதற்காக நாம் அனைவரும் மாற வேண்டும்,” என்று கருத்து தெரிவித்தார்.

இது மிகவும் மனநிறைவானது. நமக்காக அயராது உழைக்கும் ஒருவருக்கு மகிழ்ச்சியையும் புன்னகையையும் கொண்டு வருவது மிகச்சிறந்த செயல். இதை தொடருங்கள்,” என்றும் மற்றொரு கருத்து தெரிவித்தது.

ஜொமாட்டோ அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்து, ” சகோதரரே உங்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தது. “மனநிறைவான தருணம்”, “நான் இன்று பார்த்த இனிமையான விஷயம்”, “மிகவும் அழகானது” போன்ற கருத்துகளும் பதிவாகியுள்ளன.

அக்கிரங்கள், அநியாயங்கள் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும் இதுபோன்ற மனிதநேய செயல்கள் இருக்கும் வரை மனிதம் எப்போதும் இந்த உலகில் இருக்கும்.

https://www.instagram.com/reel/DKXi_kOtAMY/?utm_source=ig_web_copy_link