சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில், ஒரு பெண் தான் லட்சங்களில் சம்பாதிப்பதாக கூறி, அதன் பிறகு கூறிய வார்த்தைதான் பல நெட்டிசன்களை யோசிக்க வைத்து, அவரது எண் கணித நகைச்சுவையையும் புரிய வைத்தது.
யூடியூபர்கள் தற்போது வீதியில் செல்லும் நபர்களிடம் எல்லாம் ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு சுவாரசியமான பதில்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில், ஒரு இளம் பெண்ணிடம், “நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?” என கேட்டபோது, “நான் லட்சங்களில் சம்பாதிக்கிறேன்” என்று கூறினார். உடனே பேட்டி எடுப்பவர், “எத்தனை லட்சம்?” என்று கேட்க, அந்தப் பெண் “0.1 லட்சம்” என்று பதிலளித்தார். அவர் 10,000 ரூபாய் சம்பாதிப்பதைத்தான், அவர் 0.1 லட்சம் என்று கூறியது பலருக்கு லேட்டாகவே புரிந்தது.
“லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும்” என்ற அவரது நோக்கம் பெரியது என்றும், “அவர் ஆயிரத்தில் சம்பாதிக்கிறேன்” என்று கூறுவதை விரும்பவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது தன்னம்பிக்கைக்கு தங்களது பாராட்டுகள் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், “அந்த பெண் எண் கணித விளையாட்டில் நகைச்சுவையாக கூறியுள்ளார்” என்றும், “அவரது பாசிட்டிவான இந்த நகைச்சுவை உணர்வு எங்களை ரசிக்க வைத்தது” என்றும் தெரிவித்துள்ளனர்.
“லட்சங்களில் சம்பாதிக்கிறேன் என்று அந்தப் பெண் கூறியவுடன் முதலில் ஆச்சரியமடைந்தேன். அதன் பின்தான் அவர் பத்தாயிரம் சம்பாதிக்கிறார் என்பது கணக்கு போட்டுப் பார்த்தபின் புரிய வந்தது என்று ஒருவர் கமெண்ட் செய்தார். இன்னொருவர், முதலில் நான் நம்பவில்லை, ஆனால் ‘நம்பினால் தான் சோறு’ என்ற நகைச்சுவை காட்சி என் மனதின் முன் வந்தது. எனவே இதையும் நான் நம்புகிறேன்,” என்று பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில் வெறும் 16 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://x.com/ShoneeKapoor/status/1933106034798629068