வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் என்னென்னமோ ரேஸ் வைக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக விந்தணுக்கள் ரேஸ் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலகின் முதல் விந்தனுக்கள் ரேஸ் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்றும் இதில் கலந்து கொள்வதற்காக பல போட்டியாளர்கள் முன்பதிவு செய்து இருப்பதாகவும் அதுமட்டுமின்றி பார்வையாளர்களாக கலந்து கொள்ள மட்டுமே சுமார் 1000 பேர் டிக்கெட் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று இந்த sperm race போட்டியை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களின் விந்தணுக்களை அழுத்தமான ஒளியீட்டுடன் (high-resolution imaging) சிறிய அளவிலான ஒற்றை அணுவழி மீது ஓட வைக்கப்படும். இந்த ஒளிமைக்ரோ-வேக வழி, பெண்களின் இனப்பெருக்க அமைப்பை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், மனித உடலின் இயல்பு சூழலை உருவாக்கும் வகையில் வேதிப்பொருள் சிக்னல்கள், திரவ இயக்கவியல் (fluid dynamics) ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.
இந்த போட்டியின் மூலம் ஆண்களின் விந்தணுக்கு எந்த வேகத்தில் சென்று கருமுட்டையை அடைய முடியும் என கணக்கிடலாம். பொதுவாக ஆண்களின் விந்தணுக்கள் நிமிடத்திற்கு 5 மில்லிமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும். எனவே, இந்த போட்டி சில நிமிடங்களில் முடிவடையலாம், அல்லது ஒரு மணி நேரத்திற்கும் செல்லலாம்.
இந்த விந்தணு ஓட்டம் குறித்த போட்டி உண்மையில் ஒரு போட்டியே இல்லை. இது ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதற்கான ஒரு வழி. ஆண்களின் இனப்பெருக்க நலம் பற்றி பேசவும், கண்காணிக்கவும், மேம்படுத்தவும் மக்கள் ஆர்வம் கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சி,” என்று நிகழ்வு கையேட்டில் கூறப்பட்டுள்ளது. “நம்மால் பேச விருப்பமில்லாத ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அதில் அறிவியல் மூலம் பலவீனங்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.