இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும்.. சிக்கன் கொண்டு செல்லும் கூண்டில் குழந்தைகளை கொண்டு செல்லும் நபர்..

  இந்தியாவில் மட்டும் தான் சில வினோத சம்பவங்கள் நடக்கும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு அதிசயமான, அதே நேரத்தில் நகைச்சுவையான சம்பவம் இதை மீண்டும் நிரூபிக்கிறது. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும்…

video

 

இந்தியாவில் மட்டும் தான் சில வினோத சம்பவங்கள் நடக்கும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு அதிசயமான, அதே நேரத்தில் நகைச்சுவையான சம்பவம் இதை மீண்டும் நிரூபிக்கிறது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆண், இரண்டு சிறுவர்களை பின் பகுதியில் உட்கார வைத்து மோட்டார்சைக்கிளில் செல்வதை காணலாம். ஆனால் அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்த இரண்டு சிறுவர்களும் ஒரு கோழி கூண்டில் உட்கார்ந்து உள்ளனர்!  இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒருவர் பகிர்ந்துள்ளார். தற்போது அது இணையத்தில் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் ஒரு பெரிய கோழிக் கூண்டை பின் பகுதியில் கட்டி வைத்து, மோட்டார் சைக்கிளில் ஒருவர் சாலையில் செல்வது தெரிகிறது. ஆனால் அந்த கூண்டில்  கோழிகள் இல்லாமல், அதற்கு பதிலாக இரு சிறுவர்கள்  உட்கார்ந்து இருந்தனர்  என்பது தான் இணைய மக்களின் கவனத்தை ஈர்த்த காரணம்.

இந்த வீடியோ தெலங்கானாவின் நாகோல் பகுதியிலுள்ள பந்த்லகுடா பகுதியில் படம் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இது வைரலாகி, பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், “இது ஒரு சந்தோஷமான குடும்பம். நீங்கள் சிரிக்கலாம், ஆனால் அவர்கள் தங்களிடம் உள்ளதை வைத்தே மகிழ்ச்சியாய் இருக்கின்றனர். எல்லோரையும் மதியுங்கள், இந்த சம்பவம் குறித்து நீங்களே தீர்ப்பு சொல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

மற்றொருவர், “வெயிலின் விளைவு தானடா சாமி” என்றார். “பாதுகாப்பான பயணம்,” என்று ஒருவரும், “இந்த கோழிகள் என்ன மாதிரி?” என சிலர் பதிவு செய்துள்ளனர்.

“இந்தியாவில் தவிர வேற எங்கேயும் இதுபோல் நடக்காது,” என்று ஒருவர் பதிவு செய்திருக்க, “360 டிகிரி ஹெல்மெட்!”, “நினைவாக எப்போதும் இருக்கும் பயணம்… காற்றோட்டம் நல்லா இருக்கும்,” என்று சிலரின் கருத்தும் இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில், சிலர் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளனர். “திறக்க முடியாத கூண்டில் குழந்தைகளை இப்படி கொண்டுபோவது ஆபத்தானது,” “ஏதாவது நேர்ந்தால், யார் பொறுப்பு?” எனவும் சிலர் கேட்டுள்ளனர்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதிலிருந்து 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

https://www.instagram.com/p/DIWB5quTp3o/