அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சேர்ந்த துப்பறியும் நிபுணர் டி ஆண்ட்ரே. “உலகின் கவர்ச்சியான பெண் போலீஸ் அதிகாரி” என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். திடீரென அவர் ஏன் இணையத்தில் வைரலாகிறார் என்பதை பார்ப்போம்,.
ஹாலிவுட் காவல் துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுதந்திர தினத்திற்கு முன்னதாக கடற்கரை பாதுகாப்பு விதிகளை விளக்கும் துப்பறியும் நிபுணர் டி ஆண்ட்ரேவின் வீடியோக்கள், அதிக வரவேற்பை பெற்றுள்ளன. ஒரு வீடியோவில், அவர் அமைதியாகவும், அதேசமயம் உறுதியாகவும் பார்வையாளர்களுக்கு சில முக்கிய விஷயங்களை அறிவுறுத்துகிறார். “ஜூலை 4 அன்று ஹாலிவுட் கடற்கரைக்கு நீங்கள் சென்றால், நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் குறித்து அவர் கூறிய விதம் தான் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் அவர் போலீஸ் கேரக்டர்களில் நடிக்கும் நடிகைகளுடன் ஒப்பிடப்படுகிறார். அவருடைய வீடியோவுக்கு அவர் சொன்ன கருத்தை பின்பற்றுவதை விட அவரது அழகை வர்ணிக்கும் கமெண்ட்ஸ் அதிகமாக உள்ளது.
துப்பறியும் நிபுணர் டி ஆண்ட்ரேவின் அழகு இணையத்தில் வைரலானதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சட்ட அமலாக்கத் துறை சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்தி விதிகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கிறது என்பதே இதன் உண்மையான சிறப்பு. வழக்கமான சலிப்பூட்டும் பத்திரிகை அறிக்கைகளை வெளியிடுவதற்கு பதிலாக, ஹாலிவுட் காவல் துறை, கவர்ச்சிகரமான மற்றும் காட்சி ரீதியாக ஈர்க்கக்கூடிய ஒரு அதிகாரியை பயன்படுத்தி தங்கள் செய்தியை பரப்பி வருகிறது. அதனால் அவர்களே எதிர்பாராத வகையில் அவர் சொன்ன அறிவுறுத்தல்கள் பெரும் அளவிற்கு மக்கள் மத்தியில் போய் சேர்ந்துள்ளது. பலர் டி ஆண்ட்ரேவுக்காக இந்த வீடியோவை பலமுறை பார்த்ததாக கூறுகின்றனர். மேலும் ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான ’நீ நடந்தால் நடை அழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகு’ என்பதையும் பலர் கமெண்ட் பிரிவுல் பதிவு செய்து வருகின்றனர்.
கேமராவிற்கு முன் டி ஆண்ட்ரே தோன்றுவது இது முதல் முறையல்ல. அவர் இதற்கு முன்னரும் சில பொது சேவை அறிவிப்புகளிலும் தோன்றியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை கார்களில் விட்டுச் செல்லக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
துப்பறியும் நிபுணர் டி ஆண்ட்ரேவின் கூறிய அழகிய அம்சத்திற்காக ஒரு சிலராவது அவர் கூறிய விதிகளை பின்பற்றினால், அது கொண்டாடப்பட வேண்டிய ஒரு வெற்றியாகும்.