உங்களுக்கு இது ஸ்லீவ்லெஸ் ஆனா, இது எங்க ஊர்ல பிரா.. பிரா அணிந்து டிஸ்னி வேர்ல்ட் சென்ற பெண்.. அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு..

  ஃபுளோரிடாவில் உள்ள டிஸ்னி வேர்ல்ட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு அற்புதமான இடம் என்பதில் சந்தேகமே இல்லை. அங்குள்ள சாகச சவாரிகள், கண்கவர் தீம் நிகழ்வுகள் என பல…

dress 1

 

ஃபுளோரிடாவில் உள்ள டிஸ்னி வேர்ல்ட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு அற்புதமான இடம் என்பதில் சந்தேகமே இல்லை. அங்குள்ள சாகச சவாரிகள், கண்கவர் தீம் நிகழ்வுகள் என பல அம்சங்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஆனால், இந்த புகழ்பெற்ற பூங்காவிற்கு குடும்பத்துடன் வேடிக்கையாக சென்ற நிக்கோல் அரேனா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம், அவருக்கு பெரும் சங்கடமாக மாறிவிட்டது.

டிஸ்னி ஊழியர்கள் தான் அணிந்திருந்த ஆடை ‘பொருத்தமற்றது’ என்று கூறியதால், அவமானப்படுத்தப்பட்டதாக நிக்கோல் தனது டிக்டாக் வீடியோக்களில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அவர் அணிந்திருந்த சர்ச்சைக்குரிய ஆடை ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் லெகிங்ஸ். ஆனால், நிக்கோல் டிஸ்னியின் ஆடை கட்டுப்பாடுகளை சாடி, தனது ஆடை தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு, நிக்கோல் அரேனா தனது கணவருடன் எப்காட் பூங்காவில் எடுத்த ஒரு செல்ஃபி வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டார். டிஸ்னி வேர்ல்ட் அதிகாரிகள் நிக்கோலை அநாகரீக முறையில் ஆடை அணிந்திருந்ததாக கூறி, 45 டாலர் மதிப்புள்ள ஒரு சட்டையை வாங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். “நான் சட்டையை வாங்காமல் போயிருந்தால், ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்த சவாரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்” என்றும் நிக்கோல் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

அடுத்தடுத்த வீடியோக்களில், நிக்கோல் தான் அணிந்திருந்த சர்ச்சைக்குரிய ஆடையை தனது ஃபாலோவர்களிடம் காட்டினார். “உண்மையை சொல்லப்போனால், நான் இதை பற்றி பெரிதாக நினைக்கவில்லை. என் வயிறும் கைகளும் தவிர வேறு எதுவும் வெளியே தெரியவில்லை. ஆனால், நான் நிர்வாணமாக சென்றது போல நீங்கள் நடந்துகொள்கிறீர்கள்,” என்று அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

தனது ஆடைத் தேர்வை நியாயப்படுத்தி பேசிய நிக்கோல், “ஜிம்முக்கு செல்லும் யாருக்கும் தெரியும், ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் லெகிங்ஸ் அணிந்து நடமாடுவது முற்றிலும் சாதாரணமானதுதான். நான் ஜிம்முக்கு போகும்போது எப்படி உடையணிவேனோ, அதே மாதிரிதான் டிஸ்னிக்கும் போனேன்,” என்று விளக்கமளித்தார்.

ஆனால் டிஸ்னி வேர்ல்டில் இப்போது அமல்படுத்தப்படும் இந்த ஆடை கட்டுப்பாட்டில் ஆடைகள் சுத்தமாகவும், நேர்த்தியாகவும், நல்ல நிலையிலும் இருக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் அல்லது படங்களுடன்கூடிய ஆடைகளை தவிர்க்கவும். தயவுசெய்து, நீச்சல் உடைகள் அணிய வேண்டாம்.” இந்த விதிமுறைகள், பொழுதுபோக்கு இடங்களிலும் ஆடை கட்டுப்பாடுகள் அவசியம் என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நீங்கள் வீட்டில் இருக்கும்போது எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம், ஆனால் பொது இடத்தில் நான்கு பேர் வரும் இடத்தில் கண்களை உறுத்தாத ஆடை அணிய வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மேலும் பலர் ஆடை என்பது ஒரு பெண்ணின் சுதந்திரம், அவர் என்ன ஆடை உடுத்தலாம் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும், ஒரு தனிநபரோ, ஒரு நிறுவனமோ முடிவு செய்ய கூடாது’ என்றும் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.