பழைய கழிதலும் புதியன புகுதலும்.. 3 கோடி பேர் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய், சீமான், அண்ணாமலை தான் அவர்கள் தேர்வு.. அரசியல் ஆய்வாளர்

தமிழகத்தில் சுமார் மூன்று கோடி வாக்காளர்கள் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், மாறி மாறி இரு கட்சிகளுக்கும் வாக்களித்து வெறுப்பில் உள்ளவர்களே இந்த வாக்காளர்கள் என்றும் ஒரு தேர்தல் ஆய்வாளர்…

vijay seeman annamalai

தமிழகத்தில் சுமார் மூன்று கோடி வாக்காளர்கள் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், மாறி மாறி இரு கட்சிகளுக்கும் வாக்களித்து வெறுப்பில் உள்ளவர்களே இந்த வாக்காளர்கள் என்றும் ஒரு தேர்தல் ஆய்வாளர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த வாக்காளர்களின் தேர்வாக விஜய், சீமான், அண்ணாமலை ஆகியோர் இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்துள்ளன. புதிய கூட்டணி முயற்சிகள் நடந்தாலும், அவை பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. சினிமா நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் தனி கட்சி ஆரம்பித்தபோதும் அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. சில கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று ஒரு புதிய கூட்டணியை ஆரம்பித்தபோதும், அதுவும் வெற்றி பெறவில்லை. எனவே, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக இதுவரை தமிழகத்தில் புதிய கட்சி அல்லது கூட்டணி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

ஆனால், நடிகர் விஜய்யின் வருகை இதை சற்றே உடைத்துள்ளது என்றுதான் அரசியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாறி மாறி வேறு வழியின்றிதான் பலர் வாக்களித்து இருக்கிறார்கள் என்றும், இவர்களுக்கு மாற்றாக நம்பத்தகுந்த ஒருவர் இதுவரை அரசியலுக்கு வராததால்தான் இவ்விரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்திருக்கின்றன என்றும் அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், விஜய்யின் வருகை பொதுமக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்றும், எனவே இந்த முறை புதிய வாக்காளர்கள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் கண்டிப்பாக அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் தேர்வாக விஜய், சீமான், அண்ணாமலை ஆகியோரே இருப்பார்கள் என்றும், குறிப்பாக விஜய்க்கு அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க.வுக்கு 25% மற்றும் அ.தி.மு.க.வுக்கு 20% வாக்குகள் இருக்கும் நிலையில், விஜய் கண்டிப்பாக 15 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறுவார் என்று அந்த ஆய்வாளர் கணித்துள்ளார். எனவே, தேர்தல் முடிவு தொங்கு சட்டசபையாக வந்தால், விஜய் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் போய் புதியவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.