பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு ஆணை கைது செய்ய முயற்சி செய்தபோது, அதே நேரத்தில் இன்னொரு ஆண் அவரின் பின்புறத்தில் நின்று, இடுப்பை பிடித்து அசிங்கமாக நடந்துகொண்ட பரபரப்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வெளியாகிய வீடியோவில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆணை போலீசார் கைது செய்ய முயற்சிக்கிறார்கள். அவர் திமிராக கத்திக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு பெண் போலீஸ் அதிகாரி அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். அப்போது பின்புறத்தில் இருந்த புளூ சட்டையணிந்த மற்றொரு ஆண், அந்த பெண் அதிகாரியின் இடுப்பைப் பிடித்து சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்.
இதை உணர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, உடனே திரும்பி, அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து தடுமாறச் செய்து, அவரையும் சேர்த்து கைது செய்கிறார். சமூக வலைதளங்களில் இதற்கான பாராட்டும் பெருகி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் பரவிய பிறகு, “இந்த நாட்டில் காமவெறி பிடித்தவர்கள் குறையவே இல்லை”, “பெண் அதிகாரியையே இப்படி அவமதிக்கிறார்கள் என்றால் பொதுமக்கள் என்ன நிலை?” என்ற கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒருவர் மிகவும் கடுமையாக, “இந்த நபரின் ஆணுறுப்பை துண்டிக்கவேண்டும்” என்ற பதிவு செய்துள்ளார். அந்தக் கருத்தும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவம் தற்போது காவல்துறையிலும், சமூக வலைதளங்களிலும் தீவிர சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதிகாரிகளின் மரியாதைக்கு எதிராக நடக்கும் சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெரும்பான்மையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.