சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களுடைய தங்க சேமிப்புகளை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய தங்க வழங்கல் குறைந்து, விலை மேலும் உயர்ந்து வருகிறது.
2025 ஆம் ஆண்டில் மட்டும், தங்கம் ஏற்கனவே 21% விகிதம் உயர்ந்துள்ளது. Gold ETF-கள், Institutional demand, மற்றும் Sovereign gold bonds ஆகியவற்றிலும் முதலீடுகள் அதிகரிக்கின்றன.
“தங்க விலை உயர்வுக்கு வர்த்தக போர் தான் முக்கிய காரணம். பங்குசந்தை முதலீடுகள் தங்கமாக மாறுகின்றன. அமெரிக்காவில் ‘Stagflation’ நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கிகள் டாலரை விலக்கி தங்கத்தை நோக்கி நகர்வது தெளிவாக தெரிகிறது,” என Augmont நிறுவனத்தின் ஆய்வு தலைவர் டாக்டர் ரெனிஷா செயினானி கூறினார்.
மேலும் தங்கம் 2% உயர்ந்து, வரலாற்றிலேயே முதன்முறையாக $3,200 ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது. Spot Gold $3,237.56 வரை சென்றபின், $3,227.39 ஆக நிலை பெற்றது. அமெரிக்க தங்க வர்த்தகத்திலும் 2% விகிதம் அதிகரித்து, $3,246.30 ஆக முடிந்தது.
இந்த திடீர் உயர்வு, அமெரிக்காவுக்கு எதிராக சீனா 125% இறக்குமதி வரியை அறிவித்ததற்கு பிறகு ஏற்பட்டது. அதற்கு முந்தைய தினம், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, சீனாவுக்கான வரிகளை 145% ஆக உயர்த்தியது. இந்த வர்த்தக சண்டை, உலக பொருளாதாரத்தில் மந்தநிலை வரலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு தள்ளியுள்ளது.
UBS நிறுவனம், “தங்கத்தின் வேகமான ஏற்றம் தொடரும், அதனால் $3,500 வரை கூட செல்வதற்கான சாத்தியமுள்ளது” என கணிக்கிறது.
இந்தியாவிலோ, திருமண பருவம் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்திற்கு அதிக தேவை உள்ளது. ஆனால் பணவீக்கம், பங்கு சந்தை பாதிப்பு போன்ற காரணங்களால், மக்கள் அதிகமாக Digital Gold, Gold ETFs, மற்றும் Sovereign Gold Bonds-க்கு திரும்புகின்றனர்.
உலகளாவிய நிதி நிறுவனங்கள் தங்கள் கணிப்புகளை புதுப்பித்து வருகின்றன. Goldman Sachs நிறுவனம், 2025 முடியுமுன் தங்க விலை ஒரு அவுன்ஸுக்கு $3,300 ஆகலாம் என அறிவித்துள்ளது. Deutsche Bank தனது கணிப்பை $3,139 என உயர்த்தியுள்ளது.
இந்த கணிப்புகள் பலித்தால், மேலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தால், ஒரு புள்ளியில் 10 கிராம் தங்க விலை ரூ.1 லட்சத்தை தொடுவது ஒருசில வாரங்களில் சாத்தியம் என கூறப்படுகிறது. தங்க விலை கடந்த ஆண்டில் ஏற்கனவே சுமார் 20% ஏறிவிட்டது. இந்த வருடமே ரூ.1 லட்சம் என்ற நிலையை எட்டாது என்றாலும், வர்த்தக போர் நீடித்தால் விலை ஜெட் வேகத்தில் உயரும் வாய்ப்பு அதிகம்,” எனவும் கூறப்படுகிறது.