மோடியை பகைத்து கொண்டால் அமெரிக்க அதிபராக இருந்தாலும் ஆப்பு தான்.. எலான் மஸ்க்  அரசியலுக்கு ஆதரவா?

  அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…

elon modi

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்களில் 81% பேர், எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சியை தொடங்கலாம் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென ரஷ்யா, எலான் மஸ்க் அரசியல் ரீதியாக உதவி கேட்டால் அவருக்கு வழங்க தயார் என்று தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் ஸ்டார்லிங்க்  நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், மஸ்க் கட்சி தொடங்கினால் அவருக்கு இந்தியாவும் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா–பாகிஸ்தான் போர் விவகாரத்தில், “நான் தான் போரை நிறுத்தினேன்” என்று அதிபர் டிரம்ப் கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் கூறிவிட்டார். இது பிரதமர் மோடிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்த ட்ரம்ப் எதுவுமே செய்யாத நிலையில், மீண்டும் மீண்டும் பொய் சொல்வதாக அவரது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ட்ரம்ப் தனது பேச்சை நிறுத்தவில்லை. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மோடி, டிரம்ப்புக்கு எதிராக செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் எலான் மஸ்க்கிற்கு ஆதரவளிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதின் மற்றும் மோடி ஆகிய இருவரும் எலான் மஸ்க்கின் அரசியல் கட்சிக்கு ஆதரவளித்தால், அந்த கட்சி அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், “மோடியை பகைத்துக் கொண்டால் அது அமெரிக்க அதிபராக இருந்தாலும் ஆப்புதான்” என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இருப்பினும் எலான் மஸ்க், தன்னுடைய தொழிலை கவனிப்பதை விட்டுவிட்டு அரசியல் கட்சி தொடங்குவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.