சிந்து நதி தண்ணீர் கொடுங்க.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. சீனா, துருக்கியிடம் போய் கேள்.. நெட்டிசன்கள் பதிலடி..!

  பகல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர், இந்தியாவால் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த தண்ணீரை திறந்து விடுங்கள் என நான்கு முறை பாகிஸ்தான் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. இந்தியாவோ, தீவிரவாதத்திற்கு…

sindhu

 

பகல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர், இந்தியாவால் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த தண்ணீரை திறந்து விடுங்கள் என நான்கு முறை பாகிஸ்தான் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. இந்தியாவோ, தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் தரும் ஆதரவை நிறுத்தும் வரை தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை,” என்று கூறியுள்ளது. இந்த செய்தி குறித்து நெட்டிசன்க்ள் தீவிரவாதத்திற்கு ஆயுதம் கேட்க மட்டும் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவிடமும், துருக்கியிடமும் போய் தண்ணீர் கேள் என்று பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் உள்ள பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா பாகிஸ்தான் மீது எடுத்த பல அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று, சிந்து நதி நீர் மற்றும் அதன் கிளைநதிகள் போக்குவரத்தை கட்டுப்படுத்தியது ஆகும்.

“சிந்து நதி நீரும், ரத்தமும் ஒரே ஆறாக ஓட முடியாது,” என்றும், “பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக நடக்க முடியாது,” என்றும் இந்தியா தெளிவாக கூறிவிட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நீர்வளத் துறை செயலாளர், இந்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு நான்கு முறை கடிதம் எழுதி, “பாகிஸ்தான் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. மீண்டும் சிந்து நதி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் இந்தியா உறுதியாக, “பயங்கரவாதத்திற்கு தரும் ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் அமலுக்கு வராது,” என்று தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் இருக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறைக் காரணமாக, பாகிஸ்தானின் வயல்வெளிகள் பாலைவனம் போல் வறண்டு விட்டதாகவும், குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைக்கே கூட தண்ணீர் இல்லாததால் மக்கள் பொங்கி எழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அரசு மீதுதான் பாகிஸ்தான் மக்களுக்கு தற்போது கோபம் திரும்பி வருவதாகவும், இந்தியாவுடன் நட்பு உறவை ஏற்படுத்திக் கொண்டால்தான் பாகிஸ்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயலை உடனே நிறுத்தி பாகிஸ்தான் மக்கள் மேம்பாட்டுக்காக அரசு சிந்திக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் தொடர்ந்து பாகிஸ்தான், மக்கள் நலனை கவனிக்காமல், தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுத்து, இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டுமே குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனியாவது பாகிஸ்தான் அரசு , தன் நாட்டு மக்களுக்காக திருந்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.