ரூ.5 லட்சம் போதாது, 1 கோடி கொடுக்க வேண்டும்: ஜீவனாம்சம் வழக்கில் கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!

  20 வருடங்களாக கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், விவாகரத்து பெற்ற நிலையில், அவருக்கு கீழமை நீதிமன்றம் வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டும் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் உயர் நீதிமன்றம்…

court

 

20 வருடங்களாக கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், விவாகரத்து பெற்ற நிலையில், அவருக்கு கீழமை நீதிமன்றம் வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டும் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் அதை ஒரு கோடியாக உயர்த்தி, கணவருக்கு  அதிர்ச்சி கொடுத்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த ஒரு பெண், தனக்கு ஜீவனாம்சமாக வெறும் ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தான் 20 வருடங்களாக தன்னுடைய கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தன்னுடைய மகள் மற்றும் மகன் செலவுக்காக வெறும் ஐந்து லட்ச ரூபாய் மட்டுமே ஜீவனாம்சம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, ஒரு கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கூறியதோடு, மாதம் ஒரு லட்சம் செலவுக்கு வழங்கப்படும் தொகையை ஒன்றரை லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டார். இது, அந்த பெண் அடைந்த உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஈடாகும் என்றும் அவர் நீதிபதி தெரிவித்துள்ளார்.

41 வயதான அந்த பெண், 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். ஆனால் புகுந்த வீட்டில் சென்ற நாள் முதலே, அவருக்கு கணவன், மாமனார், மாமியார் ஆகியோரால் துன்பங்கள், தொல்லைகள், துன்புறுத்தல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, இருவரும் பிரிந்த நிலையில், நீதிபதி வெறும் ஐந்து லட்சம் ரூபாய் மட்டும் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து அந்த பெண் உயர்நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், உயர்நீதிமன்றம் அந்த தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியது.

இது, அந்த பெண்ணின் 20 வருட கால துன்பத்திற்கு ஈடு செய்யும் பணம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். அப்போது கணவர் தரப்பிலிருந்து, தான் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதாக கூறிய நிலையில், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

2020 ஆம் ஆண்டிலேயே, கோடி கணக்கில் சொத்து வாங்கி வைத்திருக்கும் அவர், கண்டிப்பாக பொருளாதாரத்தில் நஷ்டம் அடைய வாய்ப்பு இல்லை என்றும், அவர் ஒரு லிப்ட் நிறுவனத்தை நடத்தி வருவதால், நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.