இந்திய ரயில்வே இன்று முதல் அதாவது மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதியின் நோக்கம் பயண வசதியை மேம்படுத்துவது மற்றும் பெட்டிகளில் கூட்டத்தை குறைப்பது என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது அதாவது இன்று முதல் முதல் காத்திருப்பு (Waiting List) டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி முக்கியமாக கவுண்டரில் டிக்கெட் எடுக்கும் பயணிகளை பாதிக்கும். IRCTC இணையதளம் வழியாக டிக்கெட் எடுப்பவர்கள், அவர்கள் டிக்கெட் உறுதியாகாத நிலையில் அது தானாகவே ரத்து செய்யப்படும். ஆனால் கவுண்டரில் வாங்கிய காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் சிலர் ரயிலில் ஏறி, ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் இடம் பிடித்து உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் பயணிகளுக்கிடையே இடவசதி சிக்கல்கள், வழித்தடங்களில் நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்த புதிய விதியின் கீழ், TTEகளுக்கு (Traveling Ticket Examiner) கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காத்திருப்பு டிக்கெட்டுடன் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும், அவர்களை பொது பெட்டிக்கு மாற்றி அனுப்பவும் TTE-க்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பெட்டியில் மட்டும் தான் உறுதி இல்லாத டிக்கெட்டுடன் பயணிக்க அனுமதி உண்டு.
வடமேற்கு ரயில்வேவின் பொது தொடர்பாளர் கேப்டன் சசி கிரண் கூறும்போது, இந்த விதி உறுதி செய்யப்பட்ட பயணிகளின் நிம்மதிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். காத்திருப்பு டிக்கெட் வைத்த பயணிகள், ரிசர்வ் இருக்கைகளில் வலுக்கட்டாயமாக உட்கார்வது, வழியை தடுத்து நிற்பது போன்ற புகார்கள் பல நேர்மறையாக பெறப்பட்டுள்ளன. இதை தவிர்க்கவே இந்த மாற்றம்.
இந்த விதி, ரயில்வே பயணத்தை மேலும் பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் மாற்றும். பயணிகள் இனி தங்கள் பயண திட்டத்தை திட்டமிட்டு, உறுதியாக டிக்கெட் பெற்ற பிறகே ரயிலில் ஏற வேண்டும். இல்லையெனில், பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை அல்லது பொதுப் பெட்டியில் பயணிக்க வேண்டிய நிலை வரும்.
இந்திய ரயில்வே எடுத்துள்ள இந்த நடவடிக்கை, நீண்ட தூர பயணங்களில் ஒழுங்கையும் அமைதியையும் கொண்டு வரும். பயணிகள் தங்கள் டிக்கெட் நிலையை முன்பே சரிபார்த்து, கடைசி நேர குழப்பங்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கோடை பருவத்தில் பயணிகள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த விதி ஒத்துழைப்புடன் பின்பற்றப்படுவதாக இருந்தால், எல்லாருக்கும் பயணம் சீராகவும் வசதியாகவும் இருக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.