டிஜிட்டல் உலகில் வெளியே வந்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.. 15 வருடங்களாக போராட்டம் நடத்தும் சீமானுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது..

நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கவில்லை, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, மக்கள் பிரச்சினைகளை நேரடியாக களத்திற்குக் கொண்டு வரவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு விஜய்யின் ஆதரவாளர்கள்…

vijay

நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கவில்லை, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, மக்கள் பிரச்சினைகளை நேரடியாக களத்திற்குக் கொண்டு வரவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு விஜய்யின் ஆதரவாளர்கள் ஒரு புதிய கோணத்தை முன்வைக்கின்றனர். “இன்றைய டிஜிட்டல் உலகில் களத்தில் இறங்கி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே அரசியல் செய்து வெற்றி பெற்று வருகிறோம்,” என்கிறார்கள் அவர்கள்.

இதற்கு உதாரணமாக நாம் தமிழர் கட்சியின் சீமானை காட்டுகிறார்கள். “சீமான் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. நூற்றுக்கும் அதிகமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தியுள்ளார். பலமுறை கைதாகி உள்ளார். மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்துள்ளார். ஆனால், அவரது கட்சியால் இன்னும் ஒரே ஒரு கவுன்சிலர் பதவியை கூட வெல்ல முடியவில்லை. 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறார்கள். எனவே, களத்தில் இறங்கி மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும், மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று தமிழக வெற்றி கழகத்தினர் வாதிடுகின்றனர்.

“விஜய் ஒரே ஒரு ட்வீட் போட்டால் அது மில்லியன் கணக்கான மக்களுக்கு போய் சேருகிறது. அவர் ஒரு சொடக்கு போட்டாலே தமிழகமே அதிர்கிறது,” என்று கூறிவரும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள், “இன்றைய டிஜிட்டல் உலகில், டிஜிட்டல் மூலமே பிரச்சாரம் செய்தால் போதுமானது. இன்றைய இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்கு பொதுக்கூட்டம், பேரணி நடத்த வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை மக்களுக்கு இடையூறாகவே இருக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் உட்பட பல்வேறு மக்கள் பாதிக்கும் விஷயங்கள் இருக்கும்போது அப்படி ஒரு பொதுக்கூட்டம், பேரணி நடத்த வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். “ரயில் மறியல் போராட்டம், பஸ் மறியல் போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என போராட்டங்கள் நடத்துவதால் மக்களுக்கு இடையூறுதான் ஏற்படும். இதை என்றுமே மக்கள் விரும்பியது இல்லை,” என்று கூறும் தமிழக வெற்றி கழகத்தினர், “நம்முடைய குரல் எங்கே போய் சேர வேண்டுமோ, அங்கே போய் சேரும் அளவுக்கு டிஜிட்டல் மூலமே குரல் கொடுத்தால் போதுமானது. அதன் மூலமே இன்றைய காலகட்டத்தில் சாதித்து விடலாம்,” என்று உறுதியாக கூறுகின்றனர்.

ஆனால், அதே நேரத்தில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை விஜய் நடத்தாமல் இருக்க மாட்டார் என்றும், குறைந்த அளவில் நடத்துவார் என்றும், பெரும்பாலான பிரச்சாரத்தை டிஜிட்டல் மூலம்தான் செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.