பேர சொன்னா சும்மா அதிருதுல்ல… அஜித் ரசிகர்கள் ஓட்டும் விஜய்க்கு தான்.. எல்லா கட்சி ஓட்டையும் உடைக்கிறார் விஜய்.. அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு..!

விஜய் அரசியலில் புதிய அலையை ஏற்படுத்துவார் என்றும், அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் கவர வாய்ப்பு என்றும் அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஆய்வாளராகவும், தேர்தல் கணிப்பாளராகவும்…

விஜய் அரசியலில் புதிய அலையை ஏற்படுத்துவார் என்றும், அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் கவர வாய்ப்பு என்றும் அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஆய்வாளராகவும், தேர்தல் கணிப்பாளராகவும் செயல்பட்டு வரும் திருநாவுக்கரசு, வரவிருக்கும் தேர்தலில் நடிகர் விஜய்க்கு அதிக அளவில் வாக்குகள் கிடைக்கும் என்றும், அவரது வாக்கு சதவீதம் எதிர்பாராத அளவில் இருக்கும் என்றும் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு நடிகர் புதிய கட்சி தொடங்கினால், ஒரு குறிப்பிட்ட கட்சியின் வாக்குகளை மட்டுமே பிரிப்பார். ஆனால், விஜய் ஆச்சரியப்படும் விதமாக, அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் உடைப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் வாக்குகள் விஜய் பக்கம் செல்லும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்குகள் சுமார் 50% விஜய்க்கு செல்வதாகவும், சீமானின் வாக்குகள் கிட்டத்தட்ட முழுவதுமாகவே விஜய்க்கு செல்லும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆய்வாளர் திருநாவுக்கரசு சமீபத்தில் அளித்த பேட்டியில், “விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. முதல் முறை வாக்களிப்பவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே விஜய்க்குத்தான் வாக்களிக்க இருக்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் உள்ளன. அந்த வாக்குகளையும் விஜய் உடைக்கிறார். மொத்தத்தில், விஜய் அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் உடைக்கிறார்,” என்று அவர் கூறியுள்ளார்.

சினிமா மோகம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், இரண்டு கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து ஏற்பட்ட அதிருப்திதான் விஜய் பக்கம் வாக்குகள் செல்வதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இளைய தலைமுறை வாக்குகள் விஜய்க்கு கண்டிப்பாக விழ வாய்ப்பு உள்ளது. ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய எழுச்சியை பெற்றதை நான் இதுவரை பார்த்ததே இல்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இன்றைய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள நிர்வாகிகள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். “பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் ஒரு சின்ன பதவி கூட கிடைக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக குறுநில மன்னர்கள் போல் ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே எல்லா பதவியையும் வைத்துக்கொள்கிறார்கள். அதனால், புதிய கட்சிக்கு சென்றால்தான் நமக்கு பதவி கிடைக்கும் என்ற எண்ணமும் பல நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது,” என்று திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தான் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, இந்த முறை விஜய்க்கு நல்ல சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், “விஜய் பெயரை சொன்னாலே தேர்தல் களம் அதிர்கிறது. சினிமா ரசிகர்களை பொறுத்தவரை, விஜய்க்கு அஜித், ரஜினி ரசிகர்கள் உட்பட அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர்களும் வாக்களிப்பார்கள்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.