மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா? தன்னுடைய சிறுநீரை கண்களுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும் பெண்.. வீடியோ வைரல்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

புனேவில் ஒரு பெண், தினமும் காலையில் தன்னுடைய சிறுநீரால் கண்களை கழுவுவதாக கூறி ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும், கண்டனங்களையும் பெற்றுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக…

urine

புனேவில் ஒரு பெண், தினமும் காலையில் தன்னுடைய சிறுநீரால் கண்களை கழுவுவதாக கூறி ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும், கண்டனங்களையும் பெற்றுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

“மருந்தில்லா வாழ்க்கை பயிற்சியாளர்” என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் நூபுர் பிட்டி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு, “சிறுநீரில் கண் கழுவுதல் – இயற்கையின் சொந்த மருந்து” என்று தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

காலை நேரத்தில் வரும் முதல் சிறுநீரை பயன்படுத்தி கண்களை கழுவுவதாகவும், இதனால் கண்கள் வறண்டு போவது, எரிச்சல், சிவந்து போவது போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதாகவும் பிட்டி அந்த வீடியோவில் விளக்குகிறார். இதை ஒரு இயற்கை மற்றும் மாற்று மருத்துவ முறை என்று அவர் கூறுகிறார்.

இந்த வீடியோ, 24 மணி நேரத்திற்குள் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று, பொதுமக்கள் மத்தியில் பரவலான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த செயலை நம்பமுடியாதது என்றும், அருவருப்பானது என்றும் கமெண்ட்ஸ் பிரிவில் பயனர்கள் பதிவு செய்து வருகின்றனர். மேலும், மருத்துவ ஆலோசனை பெறுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.

நூபுர் பிட்டியின் இந்த வீடியோவுக்கு மருத்துவ நிபுணர்கள் கடுமையாக எதிர்த்து இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இது தொற்று மற்றும் கடுமையான கண் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விருது பெற்ற மற்றும் புகழ்பெற்ற கல்லீரல் நிபுணர் டாக்டர் சிரியாக் அபி பிலிப்ஸ், இணையத்தில் “TheLiverDoc” என்று அறியப்படுபவர், இந்த வீடியோவை X தளத்தில் பகிர்ந்துள்ளார். “தயவுசெய்து உங்கள் சிறுநீரை உங்கள் கண்களுக்குள் விடாதீர்கள். சிறுநீர் கிருமியற்றது அல்ல,” என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் பிட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்ற பிலிப்ஸ், “அம்மா உங்களுக்கு உதவி தேவை. இது சாதாரணம் அல்ல. சமூக வலைத்தளங்களில் ‘ஃபாலோவர்ஸ் மற்றும் லைக்கிற்காக இதைச் செய்கிறீர்கள் என்றால், இது சரியான வழி அல்ல. ஒரு நல்ல மருத்துவரின் உதவி பெறுங்கள்,” என்று அறிவுரை வழங்கினார்.

மனித சிறுநீர் என்பது சுமார் 95% நீரை கொண்ட ஒரு கழிவுப்பொருள். மீதமுள்ள 5% யூரியா, கிரியேட்டினின், அம்மோனியா, உப்புகள் மற்றும் உடல் வெளியேற்றும் பல்வேறு வளர்சிதை மாற்ற துணைப் பொருட்களால் ஆனது. இதில் மருந்துகள், ஹார்மோன்கள் மற்றும் இரத்தத்தில் இருந்து வடிகட்டப்பட்ட சுற்றுச்சூழல் நச்சுக்களின் தடயங்களும் இருக்கலாம். கண்களின் சளி சவ்வுகள் மிகவும் மென்மையானவை. சிறுநீர் போன்ற கழிவுப்பொருட்களைக் கண்களுக்குள் விடுவது, கண்களின் இயற்கையான pH அளவையும், பாதுகாப்பு கவசங்களையும் சீர்குலைத்து, கண் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இத்தகைய செயல்களைத் தவிர்த்து, கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவ நிபுணர்களை அணுகுவதே சரியான வழி என பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

https://x.com/pranav_agrwl/status/1937809989625872865