திமுகவின் சிறுபான்மையர் ஓட்டு போச்சு.. பாஜகவால் தனித்தன்மையை இழந்து வரும் அதிமுக.. விஜய் ஆட்சியை பிடிப்பது ரொம்ப ஈஸி.. திராவிடம் இல்லா தமிழகம்..!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் சில தனியார் அமைப்புகளும் அரசியல் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. களத்தில் இறங்கி பல கருத்துக்கணிப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு…

vijay udhayanidhi

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் சில தனியார் அமைப்புகளும் அரசியல் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. களத்தில் இறங்கி பல கருத்துக்கணிப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வரும் நிலையில், சில தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தி.மு.க.வின் அடித்தளமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள், அதிருப்தி காரணமாக விஜய்க்கு மாறுவதாகவும், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து, அந்த கட்சியின் விமர்சனங்களுக்கு பதில் கூட சொல்ல முடியாத நிலைக்கு உள்ள அ.தி.மு.க., தனது தனித்தன்மையை இழந்ததால், அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிருப்தி இருப்பதாகவும் சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு திராவிட கட்சிகளின் பின்னடைவு காரணமாக, விஜய் எளிதில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவார் என்றும் சில கருத்துக்கணிப்புகள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் வாக்குகள் குறித்து சற்றும் கவனம் செலுத்தவில்லை. அவரது கவனம் முழுவதும் புதிய வாக்காளர்கள் மற்றும் இளைய தலைமுறை வாக்காளர்கள் மீது மட்டுமே உள்ளது. தற்போது கல்லூரிகளில் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளின் ஒட்டுமொத்த வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதேபோல், 40 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினர், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் மீதும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், இதுவரை அவர்கள் பலர் வாக்களிக்காமலேயே இருந்தனர். ஆனால், அவர்களை வாக்குச்சாவடிக்கு வர வைப்பதே தன்னுடைய முதலாவது பணி என்று விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சிறுபான்மையினர் இதுவரை தி.மு.க.வுக்கு மட்டுமே வாக்களித்து வந்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மாறி மாறி இடம்பெற்று வருவதால், அந்த கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பாத சிறுபான்மையினர், தி.மு.க. கூட்டணியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணியிலும் அவர்களுக்கு தேவையான திருப்தி கிடைக்கவில்லை; பல அதிருப்திகள் இருந்து வருவதால், வேறு வழியில்லாமல் இதுவரை தி.மு.க.வுக்கு வாக்களித்து வந்த சிறுபான்மையினர் தற்போது விஜய்க்கு வாக்களிக்கத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய வாக்காளர்கள், இளைய தலைமுறை வாக்காளர்கள், சிறுபான்மையினர் வாக்காளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உட்பட சில கட்சிகளின் கூட்டணி ஆகியவை விஜய்க்கு சாதகமாக இருப்பதாகவும், எனவே இரண்டு திராவிடக்கட்சிகளையும் மிக எளிதில் விஜய் வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து விடுவார் என்றும், தமிழகம் இன்னும் சில வருடங்களில் ‘திராவிடம் இல்லாத மாநிலமாக’ மாறிவிடும் என்றும் பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தக் கருத்துக்கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்பது மக்களின் மனதில் உள்ளது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.