மாட்டிக்கிட்டியே பங்கு.. காதல் தோல்வியால் விரக்தியான சென்னை இளம்பெண்.. காதலர் பெயரில் 21 வெடிகுண்டு மிரட்டல்.. சின்ன தவறால் சிக்கியதால் கைது..!

  நாட்டையே உலுக்கிய வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் குறித்த விசாரணையில், சென்னையில் வசிக்கும் ஒரு பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் திருமணம் செய்ய விரும்பிய ஓர் ஆணை குறிவைத்து, குஜராத்…

chennai girl

 

நாட்டையே உலுக்கிய வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் குறித்த விசாரணையில், சென்னையில் வசிக்கும் ஒரு பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் திருமணம் செய்ய விரும்பிய ஓர் ஆணை குறிவைத்து, குஜராத் முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் ரெனே ஜோஷில்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணிபுரிகிறார்.

ரெனே ஜோஷில்டா, திவிஜ் பிரபாகர் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், திவிஜ் பிரபாகர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். தனது காதல் நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத ரெனே ஜோஷில்டா, தனது தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி, பயத்தையும், தவறான தகவல்களையும் பரப்பும் நோக்கில் திட்டமிட்டு இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

“ரெனே, திவிஜ் பிரபாகரை தீவிரமாகக் காதலித்து திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், அது ஒருதலைப்பட்சமாகவே முடிந்தது. பிப்ரவரி மாதத்தில் பிரபாகர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தபோது, ரெனேவின் கனவுகள் சிதைந்து, அது அவருக்குள் வெறுப்பையும், பழிவாங்கும் எண்ணத்தையும் தூண்டியது

இதையடுத்து ரெனே ஜோஷில்டா போலியான மின்னஞ்சல் முகவரிகள், வி.பி.என் (VPN) சேவைகள், மெய்நிகர் எண்கள் (virtual numbers) மற்றும் ‘டார்க் வெப்’ (dark web) ஆகியவற்றை பயன்படுத்தி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளிகள் உட்படப் பல முக்கிய பொது இடங்களில் வெடிகுண்டு தாக்குதலுக்கு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.

“திவிஜ் பிரபாகரை சிக்கவைக்கும் நோக்கில், அவர் பல மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்கினார். அவற்றில் சில பிரபாகரின் பெயரிலேயே இருந்தன.

அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ் காவல் நிலையத்தில் ஜூன் 3-ஆம் தேதி ஒரு பள்ளிக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், பல்வேறு நிறுவனங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மேலும் பல மின்னஞ்சல்கள் வெளியாகின. உதாரணமாக, “நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குண்டு வைக்கப்பட்டது. உங்களால் முடிந்தால் ஸ்டேடியத்தை காப்பாற்றுங்கள்,” என்று ஒரு மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்தது.

சமீபத்திய விமான விபத்து ஒன்றை குறிப்பிட்டு மற்றொரு மின்னஞ்சலில், “நேற்று நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதை போலவே, எங்கள் முன்னாள் முதல்வருடன் ஏர் இந்தியா விமானத்தை நாங்கள் விபத்துக்குள்ளாக்கினோம்… இப்போது நாங்கள் சும்மா இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வி.ஐ.பி. வருகைகள் மற்றும் மத நிகழ்வுகளின்போது இந்த மின்னஞ்சல்களை ரெனே ஜோஷில்டா திட்டமிட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேம்பட்ட மறைமுக கருவிகளை அவர் பயன்படுத்தியிருந்தாலும், ஒரு சிறிய தொழில்நுட்ப பிழை அவரை அடையாளம் காட்ட உதவியது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

“நாங்கள் நீண்ட காலமாக மின்னஞ்சல் அனுப்பியவரை கண்காணித்து வந்தோம். அவர் மிகவும் புத்திசாலி. தனது மெய்நிகர் தடயங்களை வெளிப்படுத்தாமல் இருந்தார். ஆனால், அவர் செய்த ஒரு சிறிய தவறு காரணமாக, நாங்கள் அவரை கண்காணித்து சென்னையில் உள்ள அவரது வீட்டிலிருந்து பிடித்தோம்,” என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த மிரட்டல்களுடன் தொடர்புடைய பல டிஜிட்டல் மற்றும் காகித ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.