நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது…பரந்தூரில் அனல் பறந்த விஜய் பேச்சு..

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் மாநில மாநாட்டிற்குப் பிறகு முதன்முறையாக சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் தனது கள அரசியலை ஆரம்பித்துள்ளார். அவரை வரவேற்ற விவசாயிகள் அவரிடம்…

Vijay Paranthur

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் மாநில மாநாட்டிற்குப் பிறகு முதன்முறையாக சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் தனது கள அரசியலை ஆரம்பித்துள்ளார். அவரை வரவேற்ற விவசாயிகள் அவரிடம் நெற்கதிரைக் கொடுத்து, பச்சை துண்டு அணிவித்தனர்.

பரந்தூரில் புதிய விமான நிலைய அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராம மக்கள் கடந்த 900 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 5100 ஏக்கர் நிலத்தில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.

இதனால் 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். எனவே இத்திட்டத்தினை வேறு இடத்தில் அமைக்கக் கோரி மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்பகுதிக்குச் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் களப்பணியை இன்று பரந்தூரில் தொடங்கியிருக்கிறார். காவல் துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் போராட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார் விஜய். மக்களைச் சந்தித்த விஜய் பேசும் போது, என்னுடைய அரசியல் களப் பணியை இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பித்துள்ளேன். மாநில மாநாட்டில் 13 நீர்நிலைகளை அழிக்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தினை கைவிடுமாறு வலியுறுத்தியிருந்தேன்.

போதைப் பொருள் கடத்தல்.. போலீஸ் இன்பார்மர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் குஜராத் அரசு..

விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன். இந்தப் பிரச்சினையில் நான் உங்களுடன் உறுதியாக நிற்கிறேன். நான் என்றும் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. இந்த இடத்தில் ஏர்போர்ட் வேண்டாம் என்றுதான் வலியுறுத்துகிறேன்.

இந்த விமான நிலையத் திட்டத்தினை மறுஆய்வு செய்ய வேண்டும். உங்கள் கிராம தெய்வங்களான எல்லையம்மன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். போராட்டத் திடலில் தான் உங்களைச் சந்திக்க விரும்பினேன். ஆனால் அதற்குத் தடை விதித்தார்கள். சமீபத்தில் துண்டுப்பிரசுரம் கொடுத்ததற்கும் தடை விதித்தார்கள்.

இதெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்று புரியவில்லை. அரிட்டாபட்டி மக்கள் போலத்தான் பரந்தூர் மக்களும் நம் மக்கள். அரசு இதனைச் சிந்தித்திருக்க வேண்டும். விமான நிலையத்தினைத் தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அதை மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.” இவ்வாறு விஜய் பேசினார்.