Bigg Boss Tamil Season 8 Day 105 இல் அனைவரும் எதிர்பார்த்த இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. எல்லோருக்கும் விருப்பமான போட்டியாளரான முத்துக்குமரன் வெற்றி வாகை சூடிவிட்டார். இந்த சீசன் உண்மையிலேயே ஸ்பெஷலான சீசன். ஏனென்றால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியது மற்றும் டாக்ஸிக்கே இல்லாத சீசன் என்று மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.
அனைத்து போட்டியாளர்களும் விளையாட்டு முனைப்போடு தான் விளையாடினார்களே தவிர யாரிடமும் பெரிதாக வன்மம் என்பது இல்லை. 24 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து ஒருவராக எலிமினேடாகி இறுதியாக பைனல் மேடையில் முத்துக்குமரனும் சௌந்தர்யாவும் நின்றார்கள். விஜய் சேதுபதி முத்துக்குமரன் தான் வெற்றியாளர் என்று அறிவித்ததும் எல்லோருமே மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஏனென்றால் ஆரம்பம் முதலே முத்துக்குமரன் விளையாடிய விதம் அவரது தமிழ் பேச்சு என்பது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் தாண்டி அவர் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அதற்குப் பிறகு முத்துக்குமரன் தான் ஜெயித்த பணத்தை வைத்து என்ன செய்வேன் என்று கூறியதுதான் அனைவரையும் ஆச்சர்யபட வைத்தது.
அவர் கூறியது என்னவென்றால் எனக்கு இதில் கிடைக்கும் பணத்தை வைத்து நாங்கள் வீடு கட்டி கடனாக இருப்பதை அடைப்பேன். அடுத்து எனது நெருங்கிய நண்பர்கள் இருவர் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது பண உதவி செய்து அவர்களுக்கு தொழிலை உருவாக்கி தருவேன். அடுத்தது எனக்கு நீண்ட நாள் ஆசை உன் நா முத்துகுமரன் அவர்களின் முக்கியமான புத்தகங்களை பல அரசு பள்ளிகளுக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார். முத்துக்குமரனுக்கு இந்த அளவு சிந்தனைகள் இருக்கிறதா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அது மட்டும் இல்லாமல் அவரை பிடிக்காதவர்கள் கூட இவர் டைட்டில் வின்னருக்கு தகுதியானவர்தான் என்று பேசும் அளவுக்கு அவரது பேச்சில் ஒரு தெளிவு ஒரு முதிர்வு ஒரு பக்குவம் என்பது இருந்தது. அதையும் தாண்டி அவரது அம்மா பேசியது அனைவருக்கும் மிகவும் பிடித்தது. பிக் பாஸ் நிறைவடைந்தது அனைவருக்கும் வருத்தமான விஷயம்தான். ஏனென்றால் அந்த அளவுக்கு மக்களோடு மக்களாக ஒன்றிவிட்டது இந்த பிக் பாஸ் சீசன். அடுத்த வருடம் பிக் பாஸ் சீசன் 9 வரும் வரை நாம் காத்திருக்க தான் வேண்டும்.