எலான் கடையை மூடிவிட்டு சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்; டிரம்ப் எச்சரிக்கை..!

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில வாரங்களாக டெஸ்லா CEO எலான் மஸ்க்கை கடுமையான சொற்களால் விமர்சித்து வருகிறார். எலான் மஸ்க் “வரலாற்றில் எந்த மனிதனையும் விட அதிக மானியம் பெறுகிறார்”…

trump elon

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில வாரங்களாக டெஸ்லா CEO எலான் மஸ்க்கை கடுமையான சொற்களால் விமர்சித்து வருகிறார். எலான் மஸ்க் “வரலாற்றில் எந்த மனிதனையும் விட அதிக மானியம் பெறுகிறார்” என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும் அரசாங்க மானியங்கள் இல்லாமல் போனால், மஸ்க் “தனது கடையை மூடிவிட்டு தன் சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்” என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க அரசின் மானியங்கள் இல்லை என்றால் மஸ்க்கின் ராக்கெட் ஏவுதல்கள் முதல் செயற்கைக்கோள் உற்பத்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தி வரை அனைத்தும் நின்றுவிடும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இது போன்ற மானியங்களை குறைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் பணத்தை சேமிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் முக்கிய வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை மீண்டும் விமர்சித்தார். அதை “ஒரு பெரிய அழகான மசோதா” என்று கிண்டல் செய்ததோடு, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், “அமெரிக்கா கட்சி” என்ற புதிய அரசியல் பிரிவை தொடங்குவதாக கோடிட்டு காட்டினார்.

எலான் தனது ‘X’ தளத்தில் ’இந்த மசோதாவில் உள்ள பைத்தியக்காரத்தனமான செலவினத்தை பார்த்தால் , இது கடன் வரம்பை ஒரு சாதனையான ஐந்து டிரில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. நாம் ஒரு ஒற்றைக் கட்சி நாட்டில் வாழ்கிறோம் என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் அவர் கூறினார்.