தைரியமாக சொல் நீ மனிதன் தானா.. இல்லை ஒரு மிருகம்.. 1 வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்த நபர்.. மண்டை ஓட்டில் எலும்பு முறிவு.. கோமாவில் குழந்தை..

  ரஷ்ய விமான நிலையம் ஒன்றில் நடந்த பயங்கரமான சம்பவத்தில், பெலாரஸ் நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி, ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். இந்த கொடூர தாக்குதலில் அந்த குழந்தை…

baby1

 

ரஷ்ய விமான நிலையம் ஒன்றில் நடந்த பயங்கரமான சம்பவத்தில், பெலாரஸ் நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி, ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். இந்த கொடூர தாக்குதலில் அந்த குழந்தை கோமா நிலைக்கு சென்றுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த திகிலூட்டும் சம்பவம், குழந்தை தனது தாயுடன் ரஷ்யாவுக்கு வந்த சில நிமிடங்களிலேயே நடந்துள்ளது.

கொடூரத் தாக்குதல்: மண்டை ஓடு, தண்டுவடத்தில் காயம்

இந்தத் தாக்குதலில் அக்குழந்தைக்கு மண்டை ஓட்டில் எலும்பு முறிவுகளும், பல தண்டுவட காயங்களும் ஏற்பட்டுள்ளன. குழந்தையின் கர்ப்பிணி தாய், குழந்தையை தள்ளுவண்டியிலிருந்து எடுக்க சென்ற சில விநாடிகளில், 31 வயதான விளாடிமிர் விட்கோவ் என்ற பெலாரஸ் நாட்டை சேர்ந்த நபர், குழந்தையை தூக்கி பலமாக தரையில் வீசியுள்ளார்.

இனவெறி காரணமா?

ரஷ்ய ஊடகங்களின்படி, இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் பாதுகாப்புத் தேடி, ஆப்கானிஸ்தான் வழியாக ஈரான் நாட்டிலிருந்து ரஷ்யாவுக்கு இந்த குடும்பம் வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இனவெறி காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணிகள் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் தாக்கம் மற்றும் கைது

தாக்குதலின் போது சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவரது இரத்தத்தில் கஞ்சாவின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சில அறிக்கைகள் அவர் போதைப்பொருட்களையும் வைத்திருந்ததாகவும் கூறுகின்றன. சைப்ரஸ் அல்லது எகிப்தில் இருந்து சமீபத்தில் ரஷ்யா வந்த விட்கோவ், காவல்துறையினரின் விசாரணைக்கு பதிலளிக்க முடியாமல், “நான் இதுபோன்ற சில தவறுகளை செய்திருக்கிறேன்” என்று மட்டும் கூறியுள்ளார்.

“போதைப்பொருள் வெறி கொண்ட ஒரு அசுரன், விமான நிலைய வருகை அறையில் ஒரு குழந்தையை பிடித்து, தனது முழு பலத்துடன் தரையில் வீசியது நம்பமுடியாதது. இதையெல்லாம் தாங்கிக்கொள்வது மிகவும் கடினம். இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வர பெற்றோர்களுக்கு வலிமை கிடைக்கட்டும்” என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் குழந்தையின் தாய்க்கு ஆறுதல் தெரிவித்துள்ளன.

கீழே உள்ள வீடியோவை இளகிய மனம் உடையோர் பார்க்க வேண்டாம்.

https://x.com/AussieSteve64/status/1937467761103634452