வாங்க நினைத்தால் வாங்கலாம்.. ஆர்சிபி அணியை வாங்குகிறாரா துணை முதல்வர்? பரபரப்பு தகவல்..!

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியபோது “நான்…

rcb team

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியபோது “நான் பைத்தியக்காரன் அல்ல. நான் சிறுவயதிலிருந்தே கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே. எனக்கு நேரம் இல்லை, நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்புகள் வந்தாலும் அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு ஏன் ஆர்.சி.பி. தேவை? நான் ராயல் சேலஞ்ச் மதுபானம் கூட அருந்துவதில்லை,” என்று கூறினார்.

ஆர்.சி.பி. அணியின் உரிமையாளர் மாற்றம் குறித்த இந்த வதந்தி, அணியின் தற்போதைய உரிமையாளரான தியாஜியோ இந்தியா அணியை விற்க முயற்சிப்பதாக வந்த செய்திகளை அடுத்துப் பரவியது. இருப்பினும், தியாஜியோ இந்த வதந்திகளை “ஊகத்தின் அடிப்படையில் உருவானவை” என்று கூறி மறுத்துள்ளது.

ஆர்.சி.பி.யின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.பி.எல். வெற்றி மற்றும் பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பிறகு அதிகரித்த அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் டிகே சிவகுமார் ஆர்சிபி அணியை வாங்க இருப்பதாக வதந்திகள் வெளியான நிலையில் அவரது மறுப்பும் அதிகாரபூர்வமாக வந்துள்ளது.

அதே வேளையில், கர்நாடக கிரிக்கெட்டுடன் தனக்குள்ள நீண்டகால தொடர்பை துணை முதல்வர் டிகே சிவகுமார் ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்காக ஆர்சிபி அணியை ஒருபோதும் வாங்க மாட்டேன் என்பதையும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.