அமித்ஷா தமிழகத்தில் கால் வைத்தால் திமுக க்ளோஸ் .. இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார்.. துக்ளக் ரவி

  தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கால் வைத்தால் திமுக க்ளோஸ் என்று துக்ளக் வாசகர் ரவி என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல்…

amitshah stalin

 

தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கால் வைத்தால் திமுக க்ளோஸ் என்று துக்ளக் வாசகர் ரவி என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், ஒரு ஆண்டு இருக்கும்போதே தமிழகத்தின் மீது அமித்ஷா “கண் வைத்துவிட்டார்” என்று ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் தேர்தலுக்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்புதான் முடிவு செய்யப்படும். ஆனால், அமித்ஷா ஒரு வருடத்திற்கு முன்பே, அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டார். மேலும் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் பார்த்து வருகிறோம். அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் பொருந்தாத கூட்டணியாக இருக்கிறது என்று ஆளும் கட்சியின் ஊடகங்கள் வதந்திகளை கிளப்பி வந்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் அமைச்சர் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். இதுமட்டுமின்றி, கூட்டணி ஆட்சிதான் என்பதை அவர் உறுதியாக சொல்லி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இழுக்க அவர் தனது அனைத்து பலத்தையும் பயன்படுத்துவார் என்றும், அவரை மீறி எந்த கட்சியும் வேறு ஒரு கூட்டணிக்கு செல்ல முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், அமித்ஷா தமிழகத்திற்குள் நுழைந்தால் திமுகவின் ஆட்டம் க்ளோஸ் ஆகிவிடும் என்று துக்ளக் வாசகர் அமித் ரவி என்பவர் பேட்டி அளித்துள்ளார்.

திமுக தேவையில்லாமல் மத்திய அரசை சீண்டிப் பார்த்துள்ளது என்றும், குறிப்பாக மும்மொழி கொள்கை குறித்து மத்திய அரசை வெறுப்பேற்றி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தொகுதி மறுசீரமைப்பு, பிரிவினைவாதம், ரூபாய் சின்னம் குறித்த பிரச்சனையால் அமித்ஷா திமுக மீது கடும் கோபத்தில் உள்ளாஅர் என்றும், எனவேதான், திமுகவின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்று சின்னம் முடிவு செய்துவிட்டதாகவும், அதனால் தான் அவர் ஒரு வருடத்திற்கு முன்பே களத்தில் இறங்கிவிட்டார் என்றும், அவர் தமிழகத்தில் காலூன்றி விட்டால் திமுகவின் ஆட்டம் க்ளோஸ் என்றும் அவர் ரவி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ருத்ரதாண்டவத்தை திமுக எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.