அந்த பயம் இருக்கனும்டா… அதிமுகவில் பாஜக இருக்கும் வரை பிரச்சனை இல்லை.. விஜய்யை பார்த்து பயப்படும் திமுக.. 30% தவெக வாங்கிவிட்டால் விஜய் தான் முதல்வர்: துக்ளக் இதயா

  “அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இருக்கும் வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நம்முடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறாது என்றும் தி.மு.க. தைரியமாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் பாஜகவை வெளியேற்றிவிட்டு…

vijay udhayanidhi

 

“அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இருக்கும் வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நம்முடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறாது என்றும் தி.மு.க. தைரியமாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் பாஜகவை வெளியேற்றிவிட்டு விஜய்யை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க.வின் தோல்வி உறுதி!” என்று துக்ளக் இதயா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் தனித்தனிக் கூட்டணிகள் என மொத்தம் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உண்மையான போட்டி விஜய்க்கும், தி.மு.க.வுக்கும் இடையேதான் இருக்கும் என இதயா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இருக்கும் வரை, அந்தக் கூட்டணிக்கு வேறு எந்த கட்சியும் செல்லாது என்று கூறிய இதயா விஜய்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது என்று குறிப்பிட்டார். “நானே அவருக்கு 10 சதவீதம் தான் ஓட்டு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தற்போது களத்தில் இறங்கிப் பார்த்தால் 20% உறுதி என்றும், ஒரு சில தொகுதிகளில் 30 சதவீதம் வாக்குகள் விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மொத்தமே தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 75% தான் வாக்குப்பதிவாகும் நிலையில், அதிமுக திமுக தவெக என மூன்று மூன்று கூட்டணிகளும் தலா 25% வாக்குகள் வாங்கினால், யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது. அப்படி இருக்கும்போது, “விஜய் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் அதிக வாக்குகள் வாங்கிவிட்டாலே அவர் ஆட்சியை அமைத்துவிடுவார், விஜய் முதலமைச்சராகிவிடுவார்!” என்றும் இதயா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கண்டிப்பாக விஜய் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்குச் செல்ல மாட்டார். ஏனெனில், அ.தி.மு.க. – தி.மு.க.வுக்கு மாற்றாகத் தன்னை நினைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து மற்ற நடிகர்கள் செய்த தவறை விஜய் செய்ய மாட்டார்” என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே, விஜய் தனித்தோ அல்லது தனியாக ஒரு கூட்டணியை அமைத்தோ போட்டியிட்டால், 25 முதல் 30 சதவீதம் வாக்குகள் உறுதி என்றும், வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாகவோ அல்லது ஆட்சியை பிடிக்கும் கட்சியாகவோ விஜய் இருப்பார் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல் முறையாகத் திராவிடம் இல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.