குரோம் பிரவுசரில் AI எக்ஸ்டென்ஷன்.. இன்ஸ்டால் செய்தால் என்னென்ன பலன்கள்?

Published:

உலகின் முன்னணி பிரவுசர்களில் ஒன்றான குரோம் பிரவுசர் எக்ஸ்டென்ஷன் என்ற வசதியை அளித்துள்ள நிலையில் இந்த வசதிகள் பயனாளிகளுக்கு பெரும் பயன்களை தந்து கொண்டிருக்கிறது என்பது ரெகுலராக குரோம் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அந்த வகையில் தற்போது குரோம் பிரவுசரில் ஏஐ எக்ஸ்டென்சல்கள் வடிவமைக்கப்பட்ட நிலையில் இதனை இணைப்பது மூலம் குரோம் பிரவுசரை எளிமையாக பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக  நாம் உருவாக்கிய வீடியோக்களை எளிமையாக ஷேர் செய்ய குரோம் எக்ஸ்டென்ஷனில் Scribe AI Extensions என்ற அம்சம் உள்ளது. அதேபோல் Monica AI Extensions என்பதை இன்ஸ்டால் செய்தால்  தேடல், எழுத்து, மொழிபெயர்ப்பு என பல தேவைகளுக்கு பயன்படும்.

Wordtune AI Extensions என்ற எக்ஸ்டென்ஷன் கண்டெண்ட் ரைட்டர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Speechyfiy AI Extensions என்பது டெக்ஸ் வடிவில் இருப்பதை ஆடியோ வடிவில் மாற்றி கொடுக்க உதவும்.

மேலும் உங்களுக்காக...