போலி நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு மொரீசியஸ் அரசு மறுப்பு..!

Published:

செபி தலைவர் மாதவி புரி புச் என்பவர் அதானி குழும நிறுவனங்களின் நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளார் என்றும் அந்த நிதிகள் மொரிசியஸ் மற்றும் பெர்முடா நாடுகளுக்கு சம்பந்தப்பட்டவை என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு மொரீசியஸ் அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் மற்றும் செபி தலைவர் மாதபி புரி புச் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்த நிலையில் பங்குச்சந்தையில் அதானி குழுமங்களின் பங்குகள் சரிந்தன.

குறிப்பாக மொரீசியஸ் மற்றும் பெர்முடா நாடுகளுடன் சம்பந்தப்பட்ட அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் என்பவர் முதலீடு செய்திருக்கிறார் என்று ஹிண்டன்பர்க் கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து மொரீசஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க்  குறிப்பிடப்பட்டிருக்கும்  ‘ஐபிஇ பிளஸ் ஃபண்ட்’ மற்றும் ‘ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1’ ஆகிய இரண்டு நிதி சேவை மொரீசியஸ் ஆணையத்தின் உரிமை பெற்றவை அல்ல என்றும் மொரீசியஸ் தலைமை இடமாக கொண்டு இயக்கம் நிறுவனங்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் மொரீசியஸ் நாட்டில் தெளிவான விதிமுறைகளை கொண்டு அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட முடியும் என்றும் போலி நிறுவனங்கள் மொரிசியஸ் நாட்டில் எந்த காலத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் எனவே மொரீசியஸ் நாட்டை வரி சொர்க்கம் என்று யாரும் அழைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விளக்கத்தை அடுத்து ஹிண்டன்பர்க்  நிறுவனத்தின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...