அட்ரஸ் இல்லாத தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்.. உலகின் முதல் டிரைவர் இல்லாத கேப் சர்வீஸ்..

உலகின் முதல் டிரைவர் இல்லாத ரோபோடாக்சி (Robotaxi) இந்த மாதம் 22ஆம் தேதி முதல் செயல்பட இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். “ரோபோடாக்சி என்பது தனது…

tesla

உலகின் முதல் டிரைவர் இல்லாத ரோபோடாக்சி (Robotaxi) இந்த மாதம் 22ஆம் தேதி முதல் செயல்பட இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். “ரோபோடாக்சி என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அதை ஜூன் 22ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும்,” அவர் தெரிவித்துள்ளார்.

“டிரைவர் இல்லாத ரோபோடாக்சி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் முழு வேகத்தில் இயங்காது. பின்னர் படிப்படியாக வேகம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காரின் இறுதி கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து தற்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அதே நேரத்தில் மனிதர்கள் இந்த காரைத் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்தக் காரை புக் செய்தால், அதுவே நேராக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்றுவிடும் என்றும், வாடிக்கையாளர் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு போய் சேர்த்துவிடும் என்றும், அதற்கான மென்பொருள்கள் சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,” அவர் தெரிவித்துள்ளார்.

ரோபோடாக்சி என்று அழைக்கப்படும் இந்த டாக்ஸியில் மக்கள் எப்படிப் பயணத்தைப் பதிவு செய்யலாம் என்பது குறித்த வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் முதலில் இது அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் பிறகு படிப்படியாக மேலும் சில நாடுகளுக்கு டிரைவர் இல்லாத ரோபோடாக்சியின் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சில நிறுவனங்கள் டிரைவர் இல்லாத காரை வடிவமைத்து இருந்தாலும், மக்களின் பயன்பாட்டுக்கான கேப் சர்வீஸில் இன்னும் இடம் பெறவில்லை. ஆனால், டெஸ்லாவின் டிரைவர் இல்லா கார் மக்களின் கேப் சர்வீஸில் இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “சாலை விதிகளை சரியாக மதித்து, எதிரே வரும் வண்டிகளைக் கண்காணித்து மிகவும் சிறப்பாக இந்த டிரைவர் இல்லாத கார் செயல்படும்,” என்று கூறப்படுகிறது.