சாமிக்கு பயப்படலனாலும் பரவாயில்லை… ஆனா இந்த ‘தூய ஆட்சிக்கு’ நீங்க பயந்துதான் ஆகணும்! கோயில் காசை ஆட்டைய போடாம ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே யூஸ் பண்ண போறோம்! இந்த அதிரடியை பார்த்துப் பொதுமக்கள் ஹேப்பியா இருக்காங்க… ஆனா, ஆன்மீகத்தோட பேரால ஊழல் பண்ணி கொழுத்தவங்களுக்கு தான் இப்போ நெஞ்சு வலியே வந்துருக்கு!

தமிழ்நாட்டுல புது கவர்மெண்ட் வந்தாலே அதிரடிக்குக் குறைவிருக்காதுப்பா. இப்போ பட்ஜெட், கரண்ட், விவசாயம்னு எல்லா டிபார்ட்மென்ட்லயும் வெள்ளை அறிக்கை ரிலீஸ் பண்ண பிளான் பண்ணிட்டு, அப்படியே நம்ம ஹிந்து சமய அறநிலையத்துறை பக்கமும் கையை…

தமிழ்நாட்டுல புது கவர்மெண்ட் வந்தாலே அதிரடிக்குக் குறைவிருக்காதுப்பா. இப்போ பட்ஜெட், கரண்ட், விவசாயம்னு எல்லா டிபார்ட்மென்ட்லயும் வெள்ளை அறிக்கை ரிலீஸ் பண்ண பிளான் பண்ணிட்டு, அப்படியே நம்ம ஹிந்து சமய அறநிலையத்துறை பக்கமும் கையை வச்சிருக்காங்க. போன ஆட்சியில கோயில் காசுல என்னென்ன பண்ணாங்கன்னு எல்லாத்தையும் வெளில கொண்டு வரப்போறாங்க. இதுபோக, ஆதினங்க கண்ட்ரோல்ல இருக்குற கோயில்களுக்கும் புதுசா சில ரூல்ஸ் போட்டு, அங்க வர்ற வருமானத்தை எப்படிச் செலவு பண்றாங்கன்னு ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணச் சொல்லியிருக்காங்க.

இந்த பிளான்ல வர்ற சூப்பரான விஷயம் என்னன்னா, நல்லா காசு வர்ற பெரிய கோயில்களோட பணத்தை எடுத்து, வருமானம் இல்லாம ஒரு கால பூஜை கூட நடக்க கஷ்டப்படுற சின்னச் சின்ன கிராமத்து கோயில்களுக்குக் கொடுக்கப் போறாங்க. இதனால எல்லா கோயில்களையும் முறையா சாமி கும்பிடவும், பூசாரிகளை நியமிக்கவும் வழி பிறக்கும். அதுமட்டுமில்ல, போன ஆட்சிக்காரங்க கண்டுகொள்ளாம விட்டதால இடிஞ்சு பாழடைஞ்சு கிடக்குற பழங்காலத்துக் கோயில்களை எல்லாம் பெரிய கோயில்களோட ஃபண்ட வச்சே சூப்பரா புதுப்பிக்கப் போறாங்க.

ஆனா, இங்கதான் ட்விஸ்ட்டே இருக்கு! போன ஆட்சியில கோயில்கள்ல இருந்த தங்கம், நகைகளை எல்லாம் உருக்குனாங்க பாத்தீங்களா… அதுல ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்குன்னு ஒரு டாக் போயிட்டு இருக்கு. அதைப்பத்தி இப்போ முழுசா ஆடிட் பண்ணப் போறாங்களாம். தங்கம் உருக்குனதுல ஏதாவது தப்பு நடந்திருந்தா, சம்பந்தப்பட்டவங்களை வச்சு செய்யப்போறதா அறநிலையத்துறை வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க. இதைக் கேட்டு போன ஆட்சியில இருந்த முக்கிய புள்ளிகளுக்கு எல்லாம் இப்போவே செம காய்ச்சல் வந்துருச்சு.

மொத்தத்துல பாத்தா, நம்ம ஊர்ல இருக்குற எல்லா டிபார்ட்மென்ட்டையும் இந்த கவர்மெண்ட் கிளீன் பண்ணிக்கிட்டு வர்றது ரொம்ப நல்ல விஷயம்பா. கோயில் காசை ஆட்டையப் போடாம ஆன்மீகக் காரியங்களுக்கு மட்டுமே யூஸ் பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சதும் பொதுமக்களும், சாமி கும்பிடுறவங்களும் செம ஹேப்பியா இருக்காங்க. ஆனா, தப்பு செஞ்சுட்டு கோயில் சொத்துல கொழுத்தவங்களுக்குத் தான் ‘நம்ம ஃபைல் எப்போ வெளில வருமோ’ன்னு மரண பயம் கண்ணுல தெரியுது!