அமெரிக்காவில் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டெஸ்லா நிறுவனம், மும்பையில் உள்ள 4000 சதுர அடியளவிலான இடத்தில் தனது முதல் ஷோரூமை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த இடத்திற்கு மாதாந்திர வாடகை மட்டும் ஒரு சதுர அடிக்கு 900 ரூபாய் என குறிப்பிடப்படுகிறது. இதன் மொத்த வாடகை சுமார் 35 லட்சம் ரூபாய் ஆகும் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, இரண்டாவது ஷோரூமை டெல்லியில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், டெல்லியில் இடம் பார்க்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, எலான் மஸ்க் அவர்களை சந்தித்து பேசினார். அதன் பிறகு தான் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, மும்பை மற்றும் டெல்லியில் ஷோரூம்களில் பணிபுரிபவர்களுக்கான ஆட்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், டெஸ்லா நிறுவனம் சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தங்களது ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.