ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் இளைய மகள் ஈவ் ஜாப்ஸ், ஒலிம்பிக் தங்க மெடல் பெற்ற வீரர் ஒருவரை காதலித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்டீவ் ஜாப்ஸின் இளைய மகள் ஈவ் ஜாப்ஸ், ஹாரி சார்ல்ஸ் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். ஹாரிஸ், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
26 வயதான ஈவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அவர் விளையாட்டு துறையில், குறிப்பாக ஓட்டப்போட்டிகளில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். அது மட்டும் மட்டுமன்றி, பேஷன் துறையிலும் இவருக்கு ஆர்வம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் பேஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் மற்றும் ஈவ் ஜாப்ஸ் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈவ் ஜாப்ஸ் இதற்கு முன்னர் இசைஞர் ஹாரி ஹட்ஸன் மற்றும் ‘தி செயின்ஸ்மோக்கர்ஸ்’ இசைக்குழுவின் ட்ரூ டாகர்ட் ஆகிய இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் காதலித்துள்ளார். அதுமட்டுமின்றி டாகர்ட் செலீனா கோமெஸ் என்பவருடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், தற்போது ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாரிஸ் சார்ல்ஸை திருமணம் செய்ய உள்ளார்.
இந்த திருமண விழாவில், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்வார் என்றும், ஈவ் ஜாப்ஸின் தாயார் உள்பட பலரும் இந்த திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர்.
அது மட்டும் இல்லாமல், இங்கிலாந்து அரச குடும்பத்தினரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸின் மகள்களும் கலந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பல பிரபலங்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.