இந்த நிலையில், வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், எலான் மஸ்க் அவர்களிடம், “எங்கள் நாட்டில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்க வாருங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“எலான் மஸ்க் அவர்களே, வங்கதேசத்திற்கு வருகை தாருங்கள். இங்கு முன்னணி தொழில்நுட்பத்தின் முக்கிய பயனாளிகள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுங்கள். வங்கதேச இளைஞர்களையும் பெண்களையும் சந்திக்க வாருங்கள்.
எங்கள் நாட்டில் உங்கள் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்குங்கள்.” என பதிவு செய்துள்ளார்.
தங்கள் நாட்டில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்கினால், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை அனைத்தும் வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனை அடுத்து, எலான் மஸ்க் விரைவில் வங்கதேசம் செல்வார் என்றும், ஸ்டார்லிங்க் சேவையை தொடங்குவது குறித்து ஆலோசனை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.