இனி டிராபிக் பிரச்சனை இருக்காது.. விரைவில் இயக்கப்படுகிறது பறக்கும் கார்.. விலை என்ன தெரியுமா?

சென்னை, பெங்களூர் உள்பட பெருநகரங்களில் டிராபிக் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில்கள் தான் ஓரளவுக்கு இந்த பிரச்சனையை தீர்த்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக பறக்கும் கார் இயக்கப்பட இருப்பதாக…

flying car

சென்னை, பெங்களூர் உள்பட பெருநகரங்களில் டிராபிக் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில்கள் தான் ஓரளவுக்கு இந்த பிரச்சனையை தீர்த்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக பறக்கும் கார் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல்களுக்கு முற்றுமுழுதாக ஒரு தீர்வாக இந்த பறக்கும் கார் இருக்கும் என்றும், இந்த கார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது என்றும் கூறப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் ஆகும்.

சாதாரண வாகனங்களைப் போல தெருக்களிலும் இந்த காரை இயக்க முடியும். அதே சமயம், பறக்கும் வகையிலும் இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் தளமாக கொண்ட ஒரு வாகன உற்பத்தி நிறுவனம் இந்த காரை தயாரித்து, வானத்தில் பறக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மின்சார உந்துதலை பயன்படுத்தி, சில குறிப்பிட்ட தொழில்நுட்ப அடுக்குகளின் மூலம் தான் இந்த கார் தரையில் இருந்து மேலே தூக்கப்படுகிறது. சோதனைக்காக தயாரிக்கப்பட்ட இந்த கார் நன்றாக இயங்கி வருவதால், விரைவில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் போக்குவரத்து சேவையாக மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிறுவயதில் பறக்கும் கார் இருக்கும் என்று புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் கதைகளிலும் படித்திருக்கும் நிலையில், தற்போது உண்மையாகவே பறக்கும் கார் இயக்கப்பட இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், டிராபிக் பிரச்சனை பெரும் அளவில் தீரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.