ஜெர்மனியில் உள்ள முக்கிய கல்லறைகளில் ஒன்றான மியூனிக் கல்லறையில் திடீரென QR கோடு காணப்பட்டதாக அந்த கல்லறையின் பாதுகாப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் வந்து அந்த QR கோடை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் புதைக்கப்பட்ட நபரின் பெயர், முகவரி தோன்றியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த QR கோடு ஸ்டிக்கர்களை கல்லறையில் ஒட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய போது, இதை ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்ட் என்றும், சில குறும்புக்காரர்களின் செயலாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இருப்பினும், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி, கல்லறை மீது QR ஸ்டிக்கர் ஒட்டியவர் யார் என்பதை கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.