2 தலைமுறை உட்கார்ந்தே சாப்பிடலாம்.. வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எத்தனை கோடி தெரியுமா?

  இன்று முடிவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 27 ஆண்டுகால ஐசிசி கோப்பை கனவை நிறைவேற்றியது. 282 ரன்கள் எடுத்தால்…

sa won1

 

இன்று முடிவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 27 ஆண்டுகால ஐசிசி கோப்பை கனவை நிறைவேற்றியது. 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, எய்டன் மார்க்கமின் அற்புதமான சதம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமாவின் பொறுப்பான அரை சதம் என இருவரும் இணைந்து அசத்தி, இலக்கை எட்ட உதவினர்.

நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய போது, தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெற இன்னும் 69 ரன்கள் தேவை. கேப்டன் பவுமா எதிர்பாராதவிதமாக விரைவிலேயே அவுட்டானாலும், மார்க்கம் அசராமல் பொறுப்புடன் ஆடி, அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். இறுதியில், கைல் வெர்ரைன் வெற்றி ரன்னை அடித்து, தென் ஆப்பிரிக்காவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுத் தந்தார்.

இது 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் டிராபிக்கு பிறகு, தென் ஆப்பிரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையுடன், தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 31.05 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. இந்த தொகையில் ஒவ்வொரு வீரருக்கு குறைந்தது ஒரு கோடிக்கும் மேல் கிடைக்கும் என்பதால் இரண்டு தலைமுறைக்கு உட்கார்ந்தே அவர்கள் சாப்பிடலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். தோல்வியடைந்தாலும், இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18.63 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2023-25 WTC சுழற்சியில் மூன்றாவது இடத்தை பிடித்த இந்திய அணிக்கு ரூ. 12.42 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

213/2 என்ற வலுவான நிலையில் இருந்து நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு, தொடக்கத்திலேயே ஒரு சிறிய அதிர்ச்சி காத்திருந்தது. கம்மின்ஸ் வீசிய பந்தில் டெம்பா பவுமா 55 ரன்களில் ஆட்டமிழந்தார். நாதன் லியோனின் பந்துவீச்சில் பந்து சுழன்று வந்ததால், தென் ஆப்பிரிக்கா அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. ஆஸ்திரேலியா ரன்களை எளிதாக விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது.

இருப்பினும், மார்க்கம் பதட்டமின்றி கம்மின்ஸ் பந்தில் பவுண்டரி அடித்து, பின்னர் மிட்-விக்கெட் திசையில் இன்னொரு பவுண்டரி அடித்து நிலைமையைச் சமாளித்தார். ஆனால், மிட்செல் ஸ்டார்க், சற்று பதட்டத்துடன் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸை கிளீன் போல்டாக்கி ஆஸ்திரேலியாவுக்கு மற்றொரு முக்கியமான விக்கெட்டை பெற்றுத் தந்தார்.

ஆஸ்திரேலியா மூன்றாவது ரிவ்யூவை வீணடித்தபோது, அது அவர்களின் விரக்தியை காட்டிக்கொடுத்தது. மார்க்கம் மற்றும் டேவிட் பெடிங்காம் இருவரும் நிதானமாக ஆடி, ரன்களை எளிதாக எடுத்து, தென் ஆப்பிரிக்காவை இலக்கை நோக்கி மெதுவாக நகர்த்தினர்.

வெற்றிக்குக் குறைவான ரன்களே தேவை என்ற நிலை வந்தபோது, பெடிங்காம் கம்மின்ஸ் பந்தில் அருமையான ஒரு ஆன்-ட்ரைவ் அடித்து, தென் ஆப்பிரிக்க ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மார்க்கம் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் மிட்-விக்கெட் திசையில் பவுண்டரி அடித்து, அடுத்த பந்திலேயே மூன்று ரன்கள் எடுத்தபோது, ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்தை எட்டியது.

மார்க்கம் 136 ரன்களில் ஆட்டமிழந்து ஆட்டத்தை முடிக்க முடியாமல் போனாலும், கைல் வெர்ரைன், ஸ்டார்க் பந்தில் கவர்-பாயிண்ட் திசையில் அடித்து வெற்றி ரன்களை பெற்று தந்தார். இந்த வெற்றி லார்ட்ஸ் மைதானத்தில் கூடியிருந்த முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் உணர்வுபூர்வமான கொண்டாட்டங்களை கொண்டதாக அமைந்தது.