பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தா… மீண்டும் மீண்டும் பொய்.. வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. அமெரிக்கா உடைத்த உண்மை..!

  பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிருக்கு, வாஷிங்டனில் நடந்த ஒரு பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய் என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எந்த…

india pakistan america

 

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிருக்கு, வாஷிங்டனில் நடந்த ஒரு பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய் என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எந்த ஒரு வெளிநாட்டு ராணுவ தளபதிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான செய்திகளையும், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும் அவர் முழுமையாக நிராகரித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம் 1775, ஜூன் 14 அன்று முறையாக நிறுவப்பட்டதை குறிக்கும் வகையில், அமெரிக்காவில் ராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அணிவகுப்பில் அதிபர் டிரம்ப் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

வாஷிங்டனில் நடந்த இந்த அணிவகுப்பு, அமெரிக்க வரலாற்றிலேயே நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ காட்சிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகள், கனரக டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் பாராசூட் படைப்பிரிவுகள் பங்கேற்றன. இந்தியா தனது குடியரசு தினத்தன்று ராணுவ அணிவகுப்புகளை நடத்துவது போல, அமெரிக்காவின் ராணுவ பலத்தை பறைசாற்றவும், வரவிருக்கும் டிரம்பின் இமேஜை உயர்த்தவும் ஒரு பிரம்மாண்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வந்த தவறான செய்திகள் இந்தியாவில் ஒரு அரசியல் புயலை கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள், இது இந்திய அரசின் இராஜதந்திர தோல்வி என குற்றம் சாட்டினர். இந்த செய்திகள் இந்தியாவின் சர்வதேச நிலைக்கு ஒரு பின்னடைவு என விமர்சனம் செய்தனர்.

சிவசேனா தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில், இது வெறும் ராஜதந்திர அவமானம் மட்டுமல்ல, “இந்தியாவின் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி” என்றும் கடுமையாக விமர்சித்தது. ஆளும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் டிரம்ப் மீது குருட்டுத்தனமான அபிமானம் கொண்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சரியான நேரத்தில் ஆட்சேபனை தெரிவிக்க தவறிவிட்டதாகவும் அந்தக் கட்சி குற்றம் சாட்டியது.

மேலும் இந்த செய்திகள், பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தின. இது இந்தியாவுக்கு எதிரான ஒரு பெரிய இராஜதந்திர வெற்றி என அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ விளக்கம், இப்போது பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வழக்கம்போல் இது பாகிஸ்தானின் சைபர் நபர்களின் பொய்மூட்டைகளில் ஒன்று என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் அவமானப்பட்டு வருகிறது. முன்னாள் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி அமெரிக்காவுக்கு சென்றபோது அவர் துணைச் செயலாளர் பதவிக்கு மேல் எந்த ஒரு உயர் அமெரிக்க அதிகாரியையும் சந்திக்க முடியவில்லை. அந்த அளவுக்கு தான் அமெரிக்கா, பாகிஸ்தானை மதித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பொய் மூட்டைகளை வழக்கம்போல் உண்மை என நம்பி அரசியல் செய்த காங்கிரஸ் கட்சிக்கும் இதுவொரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.