கொலையும் செய்வாள் பத்தினி.. கணவனை எப்படி கொலை செய்தேன் என நடித்து காண்பித்த சோனம்.. நேரில் பார்த்த போலீசார் அதிர்ச்சி..!

  மேகாலயாவில் ராஜா ரகுவன்ஷி என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை தொடர்பாக, அவரது மனைவி சோனம் ரகுவன்ஷிதான் முக்கிய குற்றவாளியாக கருதி…

sonam

 

மேகாலயாவில் ராஜா ரகுவன்ஷி என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை தொடர்பாக, அவரது மனைவி சோனம் ரகுவன்ஷிதான் முக்கிய குற்றவாளியாக கருதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சோனம் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று கொலை எப்படி நடந்தது என்பதை நடித்து காட்டச் சொல்லி விசாரணை நடத்தினர்.

போலீஸ் அதிகாரி விவேக் சியாம் இதுகுறித்து கூறியபோது, ‘குற்றம் நடந்த இடத்தை சரியாக புரிந்துகொள்ள, குற்றவாளிகளை பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினோம். அவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திய இடம், கொலை நடப்பதற்கு முன்பு ஒவ்வொருவரும் எங்கே நின்றிருந்தார்கள் என்பதையெல்லாம் உறுதிப்படுத்தினோம். ராஜாவை தாக்கப் பயன்படுத்திய ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளோம். கொலையின் சரியான இடத்தையும் அடையாளம் கண்டோம்.”

ராஜாவை மூன்று பேர் தாக்கினர். முதலில் விஷால் பலமாக தாக்கினார். பிறகு ஆனந்த், கடைசியா ஆகாஷ் தாக்கினர். விஷால் அடித்த முதல் அடியிலேயே ராஜா சுருண்டு விழுந்து ரத்தம் வர ஆரம்பித்தது. ராஜாவின் வலியை கண்டு சோனம் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர், மூவரும் ராஜாவின் உடலை கீழே தள்ளினர். இரண்டு பேர் கையை பிடித்துக்கொள்ள, ஒருவர் கால்களை பிடித்து பிணத்தை வீசியுள்ளனர்.

விசாரணையில், கொலை நடந்தபோது சோனம், ராஜாவுக்கு மிக அருகில் இருந்ததாகவும், கொலைக்கு முன்பே மற்றவர்களுக்கு சிக்னல் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. ராஜா தாக்கப்பட்டபோது சோனம் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். “சோனம் தனது கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இன்று நடந்த விசாரணையில், அவர் எங்கே நின்றார், என்ன செய்தார், போனை எப்படி உடைத்தார் என்பது உட்பட அனைத்து விவரங்களும் வெளிவந்துள்ளன. இது அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை” என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

சோனம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் ராஜாவை எப்படி கொலை செய்தார்கள் என்று நடித்து காட்டியதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.