உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா.. சன்கிளாஸ், விலை உயர்ந்த ஜாக்கெட் உடன் ஸ்டைலான சாமியார்..!

  பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் என அறியப்படும் பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, அல்லது பகேஷ்வர் தாம் பாபா, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால், இந்த முறை அவரது ஆன்மிக பேச்சுகளுக்காக…

baba

 

பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் என அறியப்படும் பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, அல்லது பகேஷ்வர் தாம் பாபா, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால், இந்த முறை அவரது ஆன்மிக பேச்சுகளுக்காக அல்ல; மாறாக, அவர் அணிந்திருந்த ஆடைகளுக்காகவும், அது வெளியான நேரத்திற்காகவும் தான் இந்த விமர்சனங்கள்.

மத்தியபிரதேசத்தின் சத்தர்பூரை சேர்ந்த இந்த இளம் ஆன்மிகவாதி, தற்போது ஆஸ்திரேலியாவில் மத சொற்பொழிவு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் விமானத்தில் ஸ்டைலான சன்கிளாஸ், விலை உயர்ந்த ஜாக்கெட் அணிந்தபடி இருந்த புகைப்படங்களும், கப்பலில் பயணம் செய்த புகைப்படங்களும் வெளியாகின.

சமூக வலைத்தளங்களில், இந்த புகைப்படங்கள் வேகமாக பரவ, பகேஷ்வர் பாபா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு காலத்தில் சாதாரண கூடாரத்தில் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து சீட்டுகள் எடுத்தவர், இப்போது எப்படி இவ்வளவு ஆடம்பரமாக உலகை சுற்றுகிறார் என பலரும் கேள்வி எழுப்பினர். சிலர் அவரை “சாமியாரிலிருந்து பிரபலமாக மாறிவிட்டார்” என்றும் விமர்சித்தனர். இன்னும் சிலர் சாமியாரை குறை சொல்வதற்கு பதில் அவருடைய பக்தர்களை விமர்சித்தனர். உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா என்ற கருத்தும் பதிவு செய்யப்பட்டது.

விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி பிஜியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் இதற்கு பதிலளித்தார். தனது விமர்சகர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அவர், “என் ஜாக்கெட்டையும் கண்ணாடியையும் பற்றி உங்களுக்கு பிரச்சினை என்றால், அவை வாங்கப்பட்டவை அல்ல, பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், “சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை தனிப்பட்ட ஆடம்பரத்திற்கு பயன்படுத்துவதில்லை; புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்கும், ஏழை பெண்களுக்கு உதவுவதற்கும் தான் செலவிடுகிறோம். வீணான எதிர்மறை எண்ணங்களை பரப்பாதீர்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விளக்கத்திற்குப் பிறகும், ஆன்லைனில் விவாதம் ஓயவில்லை. அவரது ஆதரவாளர்கள் இதை பொறாமை கொண்டவர்களின் அர்த்தமில்லாத விமர்சனம் என கூறினாலும், மற்றவர்கள், குறிப்பாக ஆன்மிக தலைவர்கள், இதுபோன்ற பொது பிம்பம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

பகேஷ்வர் பாபா மதத்தை தாண்டிய காரணங்களுக்காக பேசுபொருளாவது இது முதல் முறையல்ல. அவரது புகழ், பெரிய கூட்டங்கள், அற்புதங்கள் பற்றிய கூற்றுக்கள், அரசியல் ஆதரவுகள் போன்றவை பலராலும் பாராட்டப்பட்டும், கேள்விக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றன.