ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், “சிந்தூர்” என்ற பெயர் எனக்கு பேரார்வத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான வைஷாலி பட் என்பவர் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்.
பார்வையழகுடன் விளங்கும் ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில், தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த வைஷாலி பட், பயங்கரவாதிகள் தாக்கிய இடத்தை பார்வையிட்ட், தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர்
அதன்பின், பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வைஷாலி பட், அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் என நம்பினார். ஆனால் நாட்கள் கழிந்தபோதும் பதிலடி இல்லாததால், அவர் மனநொந்து, ஏமாற்றமடைந்தார்.
ஆனால் மே 7ஆம் தேதி காலை நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய செய்தி அவரை கண்கலங்கச் செய்தது.
சிங்கப்பூரில் பயணித்து கொண்டிருக்கும் பாஜக எம்பி ஹேமங் ஜோஷியுடன் பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாட்டையும், இந்த தாக்குதலுக்கு “சிந்தூர்” என்ற பெயரை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: “‘சிந்தூர்’ என்ற பெயர் என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் பரிசுத்தமான உறவின் ஆரம்பமாக உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உறவுகளை இழந்த ஏராளமான குடும்பங்களுக்கான நினைவாக இது திகழ்கிறது.” என்றார்.
“ஏப்ரல் 22ஆம் தேதி நான் பஹல்காமில் இருந்தேன். கொஞ்சம் தாமதமாகியிருந்தால் நானும் என் கணவரை இழந்திருப்பேன். தினமும் செய்தித்தாளை படித்து, அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தேன். முதற்கட்டமாக அரசு செயல்படாதது என் மனதை சோகமாக்கியது. ஆனால் மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய செய்தியை படித்தபோது, கட்டுக்கடங்காத அளவுக்கு அழுதேன். அந்த பெயர் சரியான தேர்வாக இருந்தது. இதை வேறு யாரும் செய்ய முடியாது; பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். ”
‘சிந்தூர்’, திருமணமான இந்து பெண்கள் இடும் குங்குமத்தை குறிக்கும் சொல். இந்த பெயரின் முக்கியத்துவம் என்னவென்றால், ஏப்ரல் மாத தாக்குதலில் பயங்கரவாதிகள் ஆண்களையே குறிவைத்து தாக்கினர், இது சிந்தூரை அழித்தது போல அவர்களின் மனைவிகளை விதவைகளாக்கியது என பொருள் கொண்டது.
முன்னதாக, இந்த ஆபரேஷனுக்கு ‘சிந்தூர்’ என்ற பெயரை பிரதமர் மோடி தான் பரிந்துரைத்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.